Last updated on மே 16, 2025
How to Worship God?
கடவுளை வணங்கும் முறை
அவசரமாக ஓடிகொண்டிருக்கும் இந்த காலத்தில் கோவிலுக்கு செல்ல கூட நேரம் ஒதுக்காமல் பார்த்த இடத்தில் கடவுளை வணங்கி விட்டு செல்கிறோம். ஆனால் கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்பிரதாயங்களை நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு எப்படி வழிபட வேண்டும் என்பது தெரியாது.
அதை நாம் பின்பற்ற கற்றுக் கொள்ள வேண்டும். எனவே அதை பற்றிய சில ஆன்மிக தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்:
The Ways to Worship God
- மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
- வீட்டு பூஜையில் கற்பூரதீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
- திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
- அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
- கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து கை, கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது.
- எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோவிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
- சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
- சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.
- இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
- திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
- ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுச் செல்ல வேண்டும்.
- கோவில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.
- குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.
- பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
- செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.
- இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்.
- பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
- புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக்கூடாது. பசுக்களோடு மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
- கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.
முறையாக கடவுளை வணங்கி வேண்டிய அருளைப் பெறுவோம்..!
Read, also
இதைப் பதிவேற்றியவர்..
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →
One thought on "கடவுளை வணங்கும் முறை"