×
Thursday 23rd of July 2026

மஹாளய பக்ஷம் – அர்த்தம், செய்வது எப்படி, பலன்கள்


Last updated on ஜூலை 6, 2026

மஹாளய பக்ஷம் - Mahalaya Paksha

Mahalaya Paksham in Tamil

மஹாளய பக்ஷம் என்பது முன்னோர்களுக்கு நன்றியைச் செலுத்தும் முக்கியமான காலம். இக்காலத்தில் பித்ருக்கள் பூமிக்கு வந்து, நாம் செய்யும் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தத்தை ஏற்றுக்கொண்டு திருப்தியடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

மஹாளய பக்ஷம் என்றால் என்ன?

மஹாளய பக்ஷம் என்பது புரட்டாசி மாத அமாவாசைக்கு முன் வரும் 15 தேய்பிறை நாட்கள் [விச்வாவஸு – ஆவணி 23 – புரட்டாசி 6 வரை (08/09/2025 – 22/09/2025) ]. இந்த நாட்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம், தானம் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவது மிகவும் சுபமாகக் கருதப்படுகிறது.

மஹாளய பக்ஷ காலமும் (வாக் – பஞ்) சிராத்த பலனும்

தேதிகிழமைதிதிசிறப்புச்ரார்த்த பலன்
08 – 09 -2025திங்கள்ப்ரதமைதன லாபம் வரும்
09 – 09 -2025செவ்வாய்த்விதியைசந்தான பாக்கியம் கிட்டும்
10 – 09 -2025புதன்திருதியைநினைத்த வரன் அமையும்
11 – 09 -2025வியாழன்சதுர்த்திசத்ரு அகற்றுதல்
12 – 09 -2025வெள்ளிபஞ்சமி – சஷ்டிமஹாபரணிவீடு முதலிய சம்பத்து சேரும் – புகழ் கூடும்
( த்விதிதி – இரண்டு திதிகள் ஒரே நாளில் சம்பாவிக்கின்றது )
13 – 09 -2025சனிசப்தமிதலைமை பதவி கிடைக்கும்
14 – 09 -2025ஞாயிறுஅஷ்டமிமத்யாஷ்டமிநல்ல புத்தி கிட்டும்
15 – 09 -2025திங்கள்நவமிவ்யதீபாதம் – அவிதவாநவமிநல்ல வாழ்க்கை துணை / பெண் / மருமகள் / பேத்தி அமையும்
16 – 09 -2025செவ்வாய்தசமிநினைத்தது நிறைவேறும்
17 – 09 -2025புதன்ஏகாதசிபுரட்டாசி மாதப்பிறப்புவித்யை (வேதம்) வளரும்
18 – 09 -2025வியாழன்த்வாதசிஸன்யஸ்த மஹாளயம்தங்கம் சேரும்
19 – 09 -2025வெள்ளித்ரயோதசிகஜச்சாயைஐஸ்வரியம், தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், பிள்ளை பேறு, நல் புத்தி, பசு உள்ளிட்ட விவசாய விருத்தி, சுதந்திரமான (பொருளாதார) நிலை அடைவர்
20 – 09 -2025சனிசதுர்த்தசிஸஸ்த்ர ஹத மஹாளயம்எதிர்கால சந்ததியினருக்கு நன்மை கிட்டும்
21 – 09 -2025ஞாயிறுஅமாவாசைஸர்வ மஹாளய அமாவாசைமேற்கூறிய பலன்களும், அதிகமாக ஸ்வர்கத்தையும் அடையும் பேறு கிடைக்கும்
22 – 09 -2025திங்கள்ப்ரதமைபித்ருக்களுக்கு திருப்தி ஏற்படும் (பொது)

யார் செய்ய வேண்டும்?

  • தந்தை அல்லது முன்னோர்களை இழந்தவர்கள்
  • பிறந்த மகன் செய்ய வேண்டும்
  • மகன் இல்லையெனில் மற்ற குடும்ப உறவினர்கள் செய்யலாம்

என்ன செய்ய வேண்டும்?

  • தர்ப்பணம் – எள், தண்ணீர், தர்ப்பை கொண்டு பித்ருக்களுக்கு அர்ப்பணம்
  • சிரார்த்தம் – பித்ருக்களுக்கு உணவு பரிமாறும் சடங்கு
  • அன்னதானம் / பிச்சை / தானம் – பசித்தோருக்கு உணவு வழங்குதல், தேவையானவர்களுக்கு உதவி

யாருக்கெல்லாம் செய்யலாம்?

மஹாளய பக்ஷத்தில் தர்ப்பணம் செய்வது பெற்றோர், தாத்தா, பாட்டி மட்டுமல்லாமல்,

  • உறவினர்கள்
  • நண்பர்கள்
  • குழந்தையில்லா பெரியவர்கள் எல்லோருக்கும் செய்யலாம்.

இவர்கள் காருணிக பித்ருக்கள் என அழைக்கப்படுவர்.

மஹாளய பக்ஷம் செய்வதன் பலன்கள்

  • பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்
  • வாழ்க்கைச் சிரமங்கள் குறையும், நன்மைகள் பெருகும்
  • ஆரோக்கியம் மேம்படும், மருந்துச் செலவு குறையும்
  • தடைபட்ட காரியங்கள் நடைபெறும்
  • திருமணத்திற்கு ஆசீர்வாதம் கிடைக்கும்
  • சுமுகமான மணவாழ்க்கை அமையும்
  • முக்கியமாக, வம்சம் வளரும், தலைமுறை தலைமுறையாக செழிக்கும்

மஹாளய பக்ஷம் என்பது ஒரு ஆன்மீக கடமை மட்டுமல்ல, நமது வம்சத்தின் வளத்திற்கும் அமைதிக்கும் காரணமான ஒரு வழிபாடு. இந்த நாட்களில் பித்ருக்களை நினைத்து தர்ப்பணம், சிரார்த்தம், தானம் செய்வது நமது வாழ்க்கையில் நன்மைகளை அதிகரிக்க உதவும்.

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

Vanakkam! I'm Uma...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

how-should-you-cross-a-temple-doorstep
  • செப்டம்பர் 5, 2025
கோவில்களின் வாசல் படியை எப்படி கடக்க வேண்டும்?
aadi-18-special
  • ஆகஸ்ட் 1, 2025
ஆடி 18 ஸ்பெஷல்: ஆன்மிக பயணத்தில் ஒரு புனித நாள்
hindu-temple
  • ஜூலை 26, 2025
கோவிலுக்கு செல்லும்போது தெரிந்து கொள்ள வேண்டியவை