×
Friday 25th of July 2025

பூஜைக்குரிய மலர்கள்


Last updated on மே 19, 2025

pooja flowers benefits in tamil

Benefits of Offering Flowers to God

பூஜைக்குரிய மலர்கள்

Pooja Flowers

🛕 வானை நோக்கி வளர்கிறது மரம். அது ஒளியின் மீது கொண்ட நாட்டத்தின் அழகான குறியீடு மலர். ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனிக் குணம் உண்டு என்கிறது ஆன்மிகம்.

🛕 நமது உடலுக்குப் பலமும், மனதுக்கு நலமும், வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலருக்கு உண்டு. மலர் தூவி இறைவனை வழிபடுங்கள், நீங்கள் எண்ணியனவெல்லாம் இயன்றிவிடும். எல்லாம் இறைவன் அருள்.

Puja Flowers – வெண் தாமரை மலர்

🛕 மலரின் பண்பு: நீரில் விளையும் மலர். இலைக்காம்பு பூக்காம்பை விட அதிக நீளமாகும். பூ மருத்துவ குணமுடையது. காம்புகள் துவர்ப்பும் குளிர்ச்சியும் உடையவை.

🛕 இந்தப் பூ வெப்பத்தால் பிறந்த விழி எரிச்சலை, ஜுரத்தைப் போக்கும். ஆண்மையின்மையை நீக்கும். இரத்தக்கொதிப்பை அகற்றும். மூளைக்குப் பலம் சேர்க்கும்.

🛕 வெண்தாமரை வேர்க்கட்டுள்ள கிழங்கிலிருந்து நேராக வளரும் நீர்க்கொடி. வட்டமான பெரிய இலைகளை நீர்ப்பரப்பில் பெற்றிருக்கும். பெரிய மலர்களை உடையது. வெண்ணிற மலர்கள்.

🛕 பலன்: வெண்தாமரையைக் கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமது தெய்வீக உணர்வு மேம்படும். மேனி பொலிவடையும். மனதில் உள்ள மாசுக்கள் அகன்று விடும். பெருமிதப்படுகின்ற வண்ணம் ஆற்றல் பெறுவோம்.

Puja Flowers – செந்தாமரை மலர்

🛕 மலரின் பண்பு: வெண்தாமரையைப் போன்றே நீரில் வளரும். சிவப்புநிறப்பூக்களையுடையது. செந்தாமரை இதயத்திற்கு வலிமை தரும், இரத்தக் கொதிப்பை குணமாக்கும்.

🛕 அன்னை மஹாலக்ஸ்மிதேவியின் அருளைபெற செந்தாமரை மலர் கொண்டு பிரார்த்தனை செய்யவும். அது அன்னைக்கு உகந்த மலர், அன்னைக்கு பிரியமானதை அற்பணிக்கும் பொது நாம் அன்னைக்கு பிரியமானவர் ஆகிவிடுவோம் அல்லவா?

🛕 பலன்: செந்தாமரையைக் கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமக்கு புது உணர்வுகளும், புதுத் தெம்பும் ஏற்படும்.

Puja Flowers – ரோஜா

🛕 ரோஜா எந்த நிறத்தில் இருந்தாலும் அழகானது தான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை எமக்குப் பெற்றுத்தரும்.

🛕 இளஞ்சிவப்பு ரோஜா: இளஞ்சிவப்பு ரோஜா கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமக்கு நல்லது, கேட்டது நமக்கு புலனாகும். நிறைகள் வளரும், குறைகள் அகன்றுவிடும்.

🛕 வெள்ளை ரோஜா: வேலை தேடுவோருக்கு நேர்முக தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற அச்சம். வேலை சரியில்லை என்ற கிரக பயம். வறுமை பயம், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியுமோ என்ற பயம். எதிலும் அச்சம், எப்பொதும் அச்சம் மீள வழியே இல்லையா என்று வேதனைபடுபவர்கள், வெள்ளை ரோஜாக்களால் இறைவனை வழிபட அச்சம் பறந்தோடும் , தைரியம் கொடிகட்டும், பகைவரும் நண்பராவர்.

🛕 வெள்ளை ரோஜாவின் தன்மை அப்படி. அது இனிமையானது தன்னம்பிக்கை அழிப்பது.

🛕 மஞ்சள் ரோஜா: தொலைந்து போன நிம்மதியை திரும்ப பெற வேண்டுமா? ரோஜாவை இறைவனுக்கு சமர்ப்பியுங்கள்.

🛕 பொறாமை, பகைமை, காரணமாக மனதில் ஏற்படும் நெருடலில் குடும்ப மகிழ்ச்சி காணாமல் போய்விடும். குரோதம் தொலைந்து கணவன், மனைவி குதூகலத்துடன் வாழ்ந்திட ரோஜா கொண்டு இறைவனை வணங்க வேண்டும்.

🛕 சிவப்பு ரோஜா: இந்துக்கள் ஊழ்வினையில் நம்பிக்கை உள்ளவர்கள், இன்றைய துன்பம் நேற்றைய தவறுகளின் விளைவு என்று எண்ணுவோம், வாழ்வின் கர்மவினைகள் நீங்கி விட்டால் நாம் புது மனிதராவோம், நமது வாழ்வும் புது வாழ்க்கை ஆகிவிடும். கர்ம வினைகளில் நம்பிக்கை உடையவர்கள். சிவப்பு ரோஜா கொண்டு இறைவனை அர்ச்சிக்க, கர்மவினைகள் நீங்கி பேரானந்தம் வந்தடையும்.

 

Also, Read

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

boy-baby-names-in-tamil
  • ஜூன் 19, 2025
ஆண் குழந்தை தமிழ்ப் பெயர்கள் [Boy Baby Tamil Names]
Aspicious Times
  • ஏப்ரல் 23, 2025
நல்ல நேரம், குளிகை, ராகு காலம், கௌரி நல்ல நேரம் & எமகண்டம்: ஒரு முழுமையான பார்வை
offering jaggery to the family deity
  • ஏப்ரல் 1, 2025
குலதெய்வத்திற்கு வழங்க வேண்டிய தானம்: வெல்லம்