- செப்டம்பர் 5, 2025
மஹாளய பக்ஷம் என்பது முன்னோர்களுக்கு நன்றியைச் செலுத்தும் முக்கியமான காலம். இக்காலத்தில் பித்ருக்கள் பூமிக்கு வந்து, நாம் செய்யும் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தத்தை ஏற்றுக்கொண்டு திருப்தியடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
மஹாளய பக்ஷம் என்பது புரட்டாசி மாத அமாவாசைக்கு முன் வரும் 15 தேய்பிறை நாட்கள் [விச்வாவஸு – ஆவணி 23 – புரட்டாசி 6 வரை (08/09/2025 – 22/09/2025) ]. இந்த நாட்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம், தானம் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவது மிகவும் சுபமாகக் கருதப்படுகிறது.
தேதி | கிழமை | திதி | சிறப்பு | ச்ரார்த்த பலன் |
---|---|---|---|---|
08 – 09 -2025 | திங்கள் | ப்ரதமை | தன லாபம் வரும் | |
09 – 09 -2025 | செவ்வாய் | த்விதியை | சந்தான பாக்கியம் கிட்டும் | |
10 – 09 -2025 | புதன் | திருதியை | நினைத்த வரன் அமையும் | |
11 – 09 -2025 | வியாழன் | சதுர்த்தி | சத்ரு அகற்றுதல் | |
12 – 09 -2025 | வெள்ளி | பஞ்சமி – சஷ்டி | மஹாபரணி | வீடு முதலிய சம்பத்து சேரும் – புகழ் கூடும் ( த்விதிதி – இரண்டு திதிகள் ஒரே நாளில் சம்பாவிக்கின்றது ) |
13 – 09 -2025 | சனி | சப்தமி | தலைமை பதவி கிடைக்கும் | |
14 – 09 -2025 | ஞாயிறு | அஷ்டமி | மத்யாஷ்டமி | நல்ல புத்தி கிட்டும் |
15 – 09 -2025 | திங்கள் | நவமி | வ்யதீபாதம் – அவிதவாநவமி | நல்ல வாழ்க்கை துணை / பெண் / மருமகள் / பேத்தி அமையும் |
16 – 09 -2025 | செவ்வாய் | தசமி | நினைத்தது நிறைவேறும் | |
17 – 09 -2025 | புதன் | ஏகாதசி | புரட்டாசி மாதப்பிறப்பு | வித்யை (வேதம்) வளரும் |
18 – 09 -2025 | வியாழன் | த்வாதசி | ஸன்யஸ்த மஹாளயம் | தங்கம் சேரும் |
19 – 09 -2025 | வெள்ளி | த்ரயோதசி | கஜச்சாயை | ஐஸ்வரியம், தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், பிள்ளை பேறு, நல் புத்தி, பசு உள்ளிட்ட விவசாய விருத்தி, சுதந்திரமான (பொருளாதார) நிலை அடைவர் |
20 – 09 -2025 | சனி | சதுர்த்தசி | ஸஸ்த்ர ஹத மஹாளயம் | எதிர்கால சந்ததியினருக்கு நன்மை கிட்டும் |
21 – 09 -2025 | ஞாயிறு | அமாவாசை | ஸர்வ மஹாளய அமாவாசை | மேற்கூறிய பலன்களும், அதிகமாக ஸ்வர்கத்தையும் அடையும் பேறு கிடைக்கும் |
22 – 09 -2025 | திங்கள் | ப்ரதமை | பித்ருக்களுக்கு திருப்தி ஏற்படும் (பொது) |
மஹாளய பக்ஷத்தில் தர்ப்பணம் செய்வது பெற்றோர், தாத்தா, பாட்டி மட்டுமல்லாமல்,
இவர்கள் காருணிக பித்ருக்கள் என அழைக்கப்படுவர்.
மஹாளய பக்ஷம் என்பது ஒரு ஆன்மீக கடமை மட்டுமல்ல, நமது வம்சத்தின் வளத்திற்கும் அமைதிக்கும் காரணமான ஒரு வழிபாடு. இந்த நாட்களில் பித்ருக்களை நினைத்து தர்ப்பணம், சிரார்த்தம், தானம் செய்வது நமது வாழ்க்கையில் நன்மைகளை அதிகரிக்க உதவும்.