×
Saturday 26th of July 2025

திருமண தடை அகற்றும் சக்தி ஶ்ரீ காத்யாயனி அம்மன், குன்றத்தூர்


Last updated on ஜூன் 24, 2025

kundrathur katyayani amman temple entrance

Kundrathur Katyayani Amman Temple in Tamil

குன்றத்தூர் காத்யாயனி அம்மன் கோவில்

மாங்கல்யம் அருளும் மகாசக்தி காத்யாயனி!!

குன்றத்தூர் முருகன் கோவில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில் உள்ளது, கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில்.

திருமணம் தடைபடும் கன்னியர்கள், ஆண்கள் மூன்று முறை சென்று திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வந்தால் திருமணம் உறுதியாகி ஆறுமாதத்தில் நடந்துவிடுகிறது.

காத் என்றால் திருமணம், அயணம் என்றால் ஆறுமாதம்.

kundrathur katyayani amman

குடும்ப பிரச்னை, உறவினர்களால் பிரச்னை,பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து திருமணம் கைகூட இந்த அம்பிகையின் சன்னதியில் வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய தினங்களில் ஒரு நாளை எடுத்துக்கொண்டு மூன்று முறை சென்று திருமணப்பேறு வேண்டி அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

  • முதல் வாரம் காத்யாயனி பூஜை
  • இரண்டாம் வாரம் விவாஹ ரட்சாபூஜை
  • மூன்றாவது வாரம் ஜென்ம பத்ரிகா பூஜை

– என்ற படி செய்து மங்கள ரட்சை கட்டிக்கொள்ள வேண்டும்.

26 வயதைக் கடந்து களத்திர தோஷத்தால் திருமணம் தடைபடும் பெண்களுக்கு சுபநாளில் காமேஸ்வரி துளசி யக்ஞம் என்ற விவாஹ வேள்வி நடத்தப்படுகிறது.

ஆலயத்தில் தோரணகணபதி, மாரிசக்தி, பாலமுருகன், நாகராஜர், துர்க்கை,பத்ம விமானக்கருவறையில் கிழக்கே திருமுகம் கொண்டு ஒளிதரும் சந்திரகாந்தக் கல்லால் செதுக்கப்பட்டவளாக அமர்ந்து அருள் தருகிறாள்.

ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் மாலை 6 மணிக்கு புத்ர லாபம் அருளும் பாலகாத்யாயனி யக்ஞம் செய்து இலவசமாக மூலிகை மருந்து ப்ரசாதம் வழங்கப்படுகிறது.

ஓம் ஶ்ரீம் கல்யாண வரம் தரும் காத்யாயனி தேவியே போற்றி..!

ஆலய பூஜை சேவை அறிய அலைபேசி எண்: 9551184326

அனுப்பியது: கே.குமார சிவாச்சாரியார், குன்றத்தூர்.

கோவில் செல்லும் வழி: சென்னை மாநகரின் தெற்கு பாகமான குன்றத்தூர் என்னும் புனித தலத்தில் இந்த “சக்தி கோவில்” இருக்கிறது. ‘கோவில் நகர்’ என்றும், செல்வமலி குன்றத்தூர் என்றும் புகழப்படுகின்ற இவ்வூரில்தான் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான் அவதரித்தார்.

பெருமைமிகு குன்றத்தூரில் முருகன் மலைக்கோவிலில் இருந்து திருநீர்மலைக்கு பிரியும் தார்சாலை ஓரத்திலும் திரு ஊரகப்பெருமாள் சன்னதிக்கு 20 அடி தூரத்திலும் இந்த ‘சக்தி கோவில்’ இருக்கிறது.

katyayani amman temple in kundrathur

இக்கோவிலுக்கு செல்ல சென்னை பிராட்வேயில் இருந்து 88கே, 60ஏ பஸ்கள் நேரடியாகச் செல்கின்றன. வடபழனியிலிருந்து எம்88, தாம்பரத்திலிருந்து 55ஜே, 66, குன்றத்தூருக்கு பாரிமுனையில் இருந்து சைதை வழியாக 88கே, 60இ, 88ஏ ஆகிய பஸ்கள் செல்கின்றன. பஸ் நிறுத்தத்தில் இருந்து (1.5 கிலோ மீட்டர்) சக்தி கோவிலுக்கு ஆட்டோ வசதிகள் உண்டு.

Katyayani Amman Temple Address

Katyayani Amman Temple, Sri Arunachaleswar Nagar, Kundrathur, Chennai – 600069.


 

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்