×
Saturday 26th of July 2025

Hindu Temple Specialities – கோவில்களின் சிறப்பு அம்சங்கள்


Last updated on ஏப்ரல் 28, 2025

hindu temple specials

Hindu Temple Specials in Tamil

நம் கோவில்களில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன..

🌸 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

🌸 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

🌸 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.

🌸 வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.

🌸 திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது.

🌸 ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

🌸 கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும் போது கருடன் தரிசனம் தருகிறது.

🌸 கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் கருட சேவையின்போது கல்கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.

🌸 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.

🌸 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

🌸 தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும் அற்புதம் நடக்கிறது.

🌸 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

🌸 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

🌸 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

🌸 குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

🌸 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

🌸 திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7 புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல் விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

🌸 வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

🌸 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

🌸 சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி முகமது உடைத்து அழித்தான்.

🌸 அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக் கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

🌸 இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை, மகான்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள் பெறுகிறார்கள்.

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

hindu-temple
  • ஜூலை 26, 2025
கோவிலுக்கு செல்லும்போது தெரிந்து கொள்ள வேண்டியவை
thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை