×
Friday 25th of July 2025

18 சித்தர்களின் பெயர்கள்


Last updated on மே 14, 2025

18 siddhargal names

18 Sithargal Name in Tamil

18 சித்தர்களின் பெயர்கள்

18 சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர், பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல என்பதை அறியலாம்.

பதினெட்டு சித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில் பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல் நூலுக்கு நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன.

மறைந்து ஜீவ சமாதிகளில் வீற்றிருந்தாலும் இன்னும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு சூட்சும ரூபமாக உதவி வருகின்றனர், பல சித்தர்கள். ஞானிகள் சித்தர்கள் எண்ணற்றோர் இருந்தாலும் 18 சித்தர்களே குறிப்பிடத்தக்கவர்கள்.

உயர்ந்த மகான்கள் நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம். சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இங்கு குறிக்கப்பட்டுள்ளது.

18 Siddhargal Name List in Tamil

வ.எண் பெயர் குரு சீடர்கள் உத்தேச காலம் சமாதி
1 நந்தி தேவர் சிவன் திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனி காசி (பனாரஸ்)
2 அகஸ்தியர் சிவன் போகர், மச்சமுனி அனந்தசயனம் (திருவனந்தபுரம்)
3 திருமூலர் நந்தி கி.பி. 10ம் நூற்றாண்டு சிதம்பரம்
4 போகர் அகஸ்தியர், காளங்கி நாதர் கொங்கனவர், கருவூரார், இடைக்காடர் கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17 பழனி
5 கொங்கனவர் போகர் கி.பி. 14ம் நூற்றாண்டு திருப்பதி
6 மச்சமுனி அகஸ்தியர், புன்னக்கீசர், பாசுந்தர் கோரக்கர் திருப்பரங்குன்றம்
7 கோரக்கர் தத்தாத்ரேயர், மச்சமுனி நாகார்ஜுனர் போயூர் (கிர்னார், குஜராத்)
8 சட்டமுனி நந்தி, தக்ஷிணாமூர்த்தி சுந்தரானந்தர் கி.பி. 14 – 15ம் நூற்றாண்டுகள் ஸ்ரீரங்கம்
9 சுந்தரானந்தர் சட்டமுனி, கொங்கனவர் கூடல் (மதுரை)
10 ராம தேவர் புலஸ்தியர், கருவூரார் கி.பி. 14 – 15ம் நூற்றாண்டுகள் அழகர் மலை
11 குதம்பை இடைக்காடர், அழுக்காணி சித்தர் கி.பி. 14 – 15ம் நூற்றாண்டுகள் மாயவரம்
12 கருவூரார் போகர் இடைக்காடர் கருவை (கரூர்)
13 இடைக்காடர் போகர், கருவூரார் குதம்பை, அழுக்காணி சித்தர் திருவண்ணாமலை
14 கமலமுனி திருவாரூர்
15 பதஞ்சலி நந்தி ராமேஸ்வரம்
16 தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்
17 பாம்பாட்டி சட்டமுனி சங்கரன் கோவில்
18 வால்மீகி நாரதர் எட்டிக்குடி

Read, also


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

Vishnu Bhagavata Posala Bhava
  • மார்ச் 31, 2025
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
Vishnu Bhagavata Kabirdas
  • மார்ச் 30, 2025
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (கபீர்தாஸர்)
vishnu bhagavata jayadeva
  • மார்ச் 30, 2025
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஜெயதேவர்)