×
Thursday 23rd of July 2026

18 சித்தர்களின் பெயர்கள்


Last updated on டிசம்பர் 30, 2025

18 siddhargal names

18 Sithargal Name in Tamil

18 சித்தர்களின் பெயர்கள்

18 சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர், பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல என்பதை அறியலாம்.

பதினெட்டு சித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில் பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல் நூலுக்கு நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன.

மறைந்து ஜீவ சமாதிகளில் வீற்றிருந்தாலும் இன்னும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு சூட்சும ரூபமாக உதவி வருகின்றனர், பல சித்தர்கள். ஞானிகள் சித்தர்கள் எண்ணற்றோர் இருந்தாலும் 18 சித்தர்களே குறிப்பிடத்தக்கவர்கள்.

உயர்ந்த மகான்கள் நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம். சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இங்கு குறிக்கப்பட்டுள்ளது.

18 Siddhargal Name List in Tamil

வ.எண்பெயர்குருசீடர்கள்உத்தேச காலம்சமாதி
1நந்தி தேவர்சிவன்திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனிகாசி (பனாரஸ்)
2அகஸ்தியர்சிவன்போகர், மச்சமுனிஅனந்தசயனம் (திருவனந்தபுரம்)
3திருமூலர்நந்திகி.பி. 10ம் நூற்றாண்டுசிதம்பரம்
4போகர்அகஸ்தியர், காளங்கி நாதர்கொங்கனவர், கருவூரார், இடைக்காடர்கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17பழனி
5கொங்கனவர்போகர்கி.பி. 14ம் நூற்றாண்டுதிருப்பதி
6மச்சமுனிஅகஸ்தியர், புன்னக்கீசர், பாசுந்தர்கோரக்கர்திருப்பரங்குன்றம்
7கோரக்கர்தத்தாத்ரேயர், மச்சமுனிநாகார்ஜுனர்போயூர் (கிர்னார், குஜராத்)
8சட்டமுனிநந்தி, தக்ஷிணாமூர்த்திசுந்தரானந்தர்கி.பி. 14 – 15ம் நூற்றாண்டுகள்ஸ்ரீரங்கம்
9சுந்தரானந்தர்சட்டமுனி, கொங்கனவர்கூடல் (மதுரை)
10ராம தேவர்புலஸ்தியர், கருவூரார்கி.பி. 14 – 15ம் நூற்றாண்டுகள்அழகர் மலை
11குதம்பைஇடைக்காடர், அழுக்காணி சித்தர்கி.பி. 14 – 15ம் நூற்றாண்டுகள்மாயவரம்
12கருவூரார்போகர்இடைக்காடர்கருவை (கரூர்)
13இடைக்காடர்போகர், கருவூரார்குதம்பை, அழுக்காணி சித்தர்திருவண்ணாமலை
14கமலமுனிதிருவாரூர்
15பதஞ்சலிநந்திராமேஸ்வரம்
16தன்வந்தரிவைத்தீஸ்வரன் கோவில்
17பாம்பாட்டிசட்டமுனிசங்கரன் கோவில்
18வால்மீகிநாரதர்எட்டிக்குடி

Read, also

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

sundaramoorthy-swamigal
  • ஜூன் 2, 2026
சுந்தரர் – சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு
mahavatar-babaji
  • ஆகஸ்ட் 4, 2025
மஹாவதார் கிரியா பாபாஜி
Vishnu Bhagavata Posala Bhava
  • மார்ச் 31, 2025
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)