×
Tuesday 7th of April 2026

சிவனை வேண்டி சில வரிகள்


aanmeegam-lord-shiva

என் நெஞ்சத்தில்
அமர்ந்த
அஞ்செழுத்தின்
நாதனே
பஞ்சாட்சர மந்திரமே
தஞ்சமென்று நான்
நின்னை சரண் அடைந்தேன்….

வானாகி மண்ணாகி
வளியாகி ஒளியாகி
நீராகி எங்கும் நிறைந்து
பஞ்சபூத மாய் விளங்கும்
பரமனே பரமேஸ்வரா
நின்னை சரண்
அடைந்தேன்….

ஆகாய ரூபமாய்
சிதம்பரத்தில்
நடனமாடும்
தில்லை அம்பல
நடராஜா ஈசனே
சிவகாமி நேசனே
நின்னை சரண்
அடைந்தேன் ….

நிலமாய் பிர்த்வி
லிங்கமாய்
காஞ்சியில்
வீற்றிருக்கும்
ஏகாம்பரேஷ்வரா
சுந்தரருக்கு பார்வை கொடுத்த
சம்போ மஹாதேவா
நின்னை சரண்
அடைந்தேன்….

காற்று ரூபமாய்
காளஹஸ்தியில்
வீற்றிருக்கும்
காளஹஸ்தீஸ்வரா
கையிலே வில்லோடும்
நெஞ்சிலே தூய
அன்போடும் வந்த
கண்ணப்பனுக்கு
கண்தானம் தந்து
முக்தி கொடுத்த
ஈஸ்வரனே நின்னை சரண்
அடைந்தேன்….

ஒளியான அக்னி
ரூபமாய்
திருவண்ணா
மலையின்
ஜோதி ரூபனே
அருணாசலீஸ்வரா
அர்தநாரீஸ்வரா
நின்னை சரண்
அடைந்தேன்….

நீராய் திருவானை
காவலில்
காவேரியின் நீர்
கொண்டு
அம்பிகையின்
கை கொண்டு
பிரதிஷ்டை செய்த
ஜம்புலிங்கேஸ்ஸா நின்னை சரண்
அடைந்தேன்….

பாலைக் கொடுத்து திரு
ஞானசம்பந்தரை
சூலைக் கொடுத்து
திருநாவுக்கரசரை
ஓலைக் கொடுத்து
சுந்தரரை
நூலைக்கொடுத்து
மாணிக்க
வாசகரை தெய்வமாக்கிய
சர்வேஸ்வரா
நின்னை சரண்
அடைந்தேன் ….

ஞானத்தை உடைய சம்பந்தரை
ஞானப்பால் கொடுத்து திருஞானசம்பந்தர்ஆக்கினாய்
“தோடுடைய செவியன் விடை
யேறியோர்” என்ற
தேவாரப் பாடலைப் பெற்ற
தேவனே ஈசனே
நின்னை சரண்
அடைந்தேன் ….

சமணராய் இருந்த
மருள்நீக்கியாரை
சூலை நோய் கொடுத்து
திருநாவுக்கரசர்
ஆக்கினாய்
“மாசில் வீணையும்
மாலைமதியமும்”
என்ற பாடலைப்
பெற்ற மகேஷ்வரா
நின்னை சரண்
அடைந்தேன் ….

நம்பியாரூரனின்
அழகால் அவரை
சுந்தரராக்கினாய்
திருமண நாளன்று
முதியவராய்
வேடம் பூண்டு
ஓலைக் கொடுத்து
திருமணத்தை நிறுத்திய உன்னை உணர்ந்த
சுந்தரரின்
“பித்தா பிறை
சூடி” என்ற
தேவாரப் பாடல்
பெற்ற பிஞ்ஞகனே
நின்னை சரண்
அடைந்தேன் ….

வாதவூராரை சீடர் என ஈர்த்துக் கொண்ட ஈசனே
மணிவாசகரின்
திருவாசகம் எனும்
தேனை அளித்து அவரை மாணிக்க
வாசகராக்கினாய்
ஆவுடையார் அம்பலத்தில்
ஆத்மநாதனாய்
அமர்தாய்
ஆத்மாவுக்கு நாதனாகிய
ஆராத இன்பம்
அருளும் ஈசா
“பால் நினைந்து
ஊட்டும் தாயினும்
சாலப்பரிந்து நீ “
எனப் பாடப்பெற்ற
சிவபெருமானே
நின்னை சரண்
அடைந்தேன் …

திருவிளாயாடல்
பலபுரிந்த
சிற்றம்பல
நாதனே சிவனே
என் இதயத்தின்
இசையாய்
மலர்ந்திட்ட இறைவா…
பிறவிக்கடலில்
சுழல்கிறேன்
நாளை யாதென
அறியேன்….
இன்று யாவும் நீ
என உணர்ந்தேன்
நின் மலர் பாதம்
பற்றினேன்….
என்னை மறந்தேன்
உன்னை நினைந்தேன்
என்னுள் நீ நிறைந்தாய்
உன் அருள்
கரம் காட்டி எனக்கு
அபயம் அளிப்பாய்
அதைவிட வேறு
எதுவும் வேண்டேன்
ஜகத்தை ஆளும்
ஜகதீஷ்வரா
நின்னை சரண்
அடைந்தேன் …

எழுதியவர்: வெ. உமா

வெ. உமா
நன்றி: வெ. உமா

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thiruverkadu-vedapureeswarar-temple-entrance-gopuram
  • மார்ச் 14, 2026
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு
thiruverkadu-devi-karumariamman-temple-gopuram
  • மார்ச் 5, 2026
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு
thirukokarnam-gokarneswarar-pragadambal-temple
  • பிப்ரவரி 19, 2026
அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் திருக்கோவில், திருக்கோகர்ணம்
×

🔕 விளம்பரமில்லா ஆன்மீக அனுபவம்

விளம்பரங்கள் இல்லாமல் ஆன்மீக உள்ளடக்கங்களை வாசிக்க விரும்புகிறீர்களா?

₹949 1 Year
₹649 6 Months
₹349 3 Months
₹149 1 Month
WhatsApp மூலம் Subscribe செய்யவும்
🔕