×
Thursday 2nd of October 2025

பிரபஞ்ச சக்தி நிரம்பிய அதிசிய மஹாமாயா பொக்கிஷங்கள் நிறைந்த குகை கொலு


Last updated on செப்டம்பர் 26, 2025

Golu at Chennai Padri Narayanan House

இந்த ஆண்டு நவராத்ரி கொலுவில், எங்கள் கொலு தீம் பெயர் “அதிரகசிய பிரபஞ்சத் தேஜஸ்“. காண்பவர் அனைவரையும் வாழ்க்கை உண்மையை உணர வைத்து ஆனந்தமாக பரிமாற்றும் சக்திப் படைத்தது. எனது 65ல் நான் ஒருவனாகவே 3 மாத காலம் அனைவரின் ஆனந்ததிற்காக உருவாக்கும் பல அதிசியங்கள் கொண்ட உலகத்திலேயே ஒரே சக்தி கொலு.

வேலை காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்ததால், ஒவ்வொரு முறை புதிய இடங்களுக்குச் செல்லும்போதும் எல்லாம் அங்கு அருகாமையில் உள்ள ஆன்மீக இடங்கள், இயற்கை பிரதேசங்கள் மற்றும் மிஸ்டிக்கள் இடங்களைப் பார்க்கும் வழக்கம் எனக்கு உருவாகியது. அப்பொழுது நான் எனக்கு அறியாமல் இயற்கையின் சக்தியால் பிரபஞ்ச(மகாமாயா சக்தி) அறிவை உணர்ந்தேன்.

அந்த அனுபவங்கள் என்னை அங்கங்கு உள்ள அற்புதமான பொருட்களை சேகரிக்கத் தூண்டியது மற்றும் அவற்றில் உள்ள மிஸ்டிகள் சக்தியைப் பிறரின் நலனுக்காக எப்படி பயன்படுத்துவது என்று ஞானம் பெறவும் தூண்டியது.

குரு, ஆச்சார்யன், ஆன்மீக பெரியவர்கள் ஆசீர்வாதங்களுடன். கொலுவின் மூலம், அனைவரின் நல்வாழ்வுக்காக இயற்கை (பிரபஞ்ச) ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் இந்த நவராத்திரி கொலுவை எனது 45 வருடங்களாக சேர்த்த மிஸ்டிக்கல் சேகரிப்புகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதற்கும், மற்றும் பிரபஞ்சத் தேஜஸ் உண்மையை அனைவரோடும் பகிர்வதற்கும் ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொண்டேன். இதன் மூலம் என் சேகரிப்புகள், இதன் சக்திகள், வாழ்க்கை அனுபவங்கள், மற்றும் ஆழமான அர்த்தங்களை விளக்குவதில் ஆனந்தம் கொள்கிறேன். இவற்றை சேகரிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது அதோடு இத்தனை வருடங்கள் இவற்றை பராமரித்து வைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தும் அதன் சக்தி தான் எனக்கு உதவுகிறது.

நமது பாரதீய கலாச்சாரத்தை முழுமையாக பிரதிபலிக்கும் இந்த கொலு என்றால் மிகையாகாது. பெண்மையின் சக்தியையும் மற்றும் வாழ்க்கை உண்மையையும் அறிய அனைத்து வயதினரும் வரவேண்டும். இந்த மிஸ்டிக்கல் குகை கொலு, பிரபஞ்சத்திலும் மற்றும் நம்முள்ளும் மறைந்து இருக்கும் பிரபஞ்சத் தேஜஸ் என்ற கோட்பாட்டை உயிர்த்தெழுப்பும் ஒரு சிறந்த படைப்பு. என் மனைவி ஜெயலட்சுமி மற்றும் பத்ரி நாராயணன் எனும் நான் அர்ப்பணிப்புடன் உருவாக்கிய இந்த மஹாமயி திருத்தல குகை கொலு, மந்திரமிகு அற்புதங்கள் நிறைந்த ஒரு தரிசனமாகும். சென்னை கே கே நகரில் உள்ள எங்கள் வீட்டில் உருவாக்கி இருக்கிறோம்.

ஆயிரக்கணக்கான லிங்கங்கள், சாளக்கிராமங்கள், ருத்ராக்ஷங்கள், பல வண்ண கல்கள், கிரிஸ்டல் க்ளஸ்டர்கள், பூமியின் ஆழத்தில் இருக்கும் சக்திப் பாறைகள், அற்புதக் கிரிஸ்டல்கள், ரத்தினங்கள், பெரிய சங்குகள், வலம்புரி சங்குகள், சிப்பிகள், விஷ்ணு சக்கரங்கள், முத்துகள் மற்றும் பல சமுத்திரத்தின் உள்ளே இருந்து கிடைக்கும் இயற்கை அதிசயங்கள், மிதக்கும் கல், பித்தளை- பஞ்சலோக – கல் சிலைகள், மிக சிறிய மூர்த்திகள், பிரமீடுகள், ஹீலிங் கற்கள், நீர்வீழ்ச்சிகள், கைலாசம், வைகுண்டம், மற்றும் பல அற்புத சேகரிப்புகளை கண்டறியுங்கள்.

ருத்ராக்ஷ மலை, பலமுக ருத்ராக்ஷங்கள், கற்பகவிருக்ஷம், மகாமாயி சர்வ ஆத்ம இரக்க்ஷகி, விஷ்வரூபிணி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, மகாமேரு, ரெயின்போ கிரிஸ்டல் லிங்கம், மரகத லிங்கம், நர்மதா லிங்கம், சிவசக்தி, மகாமாயா, பாரத மாதா, மூங்கில் காலபைரவர், வண்ணமயமான பாம்புகள் மற்றும் பலவற்றின் சக்திகளை உணருங்கள். கர்மாவை சுத்திகரிக்கும் நெருப்பு சக்தி, விண்ணிலிருந்து வரும் ஓலியதிர்வு, ஓடும் நீர் ஓலி மற்றும் பலவண்ண ஒளிகள் போன்ற ஒரு அறிவுப் படைப்புகளுக்கு இத்தனை பேராற்றல் இருந்தால், ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு எவ்வளவு ஆற்றல் கொடுத்திருப்பாள் நம் பிரபஞ்ச தாய் என்று உணர்ந்து உயருங்கள்.

பூமிக்கு மேலே விளையும் அதிப்பராக்கிரம பவித்ர சக்திகள் கொண்ட மருந்து விதைகள் காய்கள் தண்டுகள் வேர்கள் பல வருடங்களாக காய்ந்தும் அதன் வாசனை சக்தியை இன்னும் வைத்திருக்கும் மிஸ்டிகள் உண்மை நம்மை சக்தி ஆக்குவது உறுதி. 45 வருடங்களாக என்னோடு இருக்கும் அதிசியங்களின் அற்புதத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து சக்திப் பெற்று ஆனந்தம் கொள்வீர்.

அனைவரும் புனிதமான இந்த பிரபஞ்ச கொலுவில் உள்ள ஆழ்ந்த உண்மைகள் கண்டறிந்து பரம ஆனந்தத்தை அனுபவிக்க அழைக்கின்றோம். மகாமாயா குகைக் கோயிலுக்குள் செல்பவர்கள், உலகளாவிய குணப்படுத்தும் ஆற்றல்கள், ஸ்படிகம், பிரமிடு, வண்ணம், மனநல குறியீடு, பஞ்ச பூத குணப்படுத்துதல், குண்டலினி சக்ரா, மாய ஆற்றல், மற்றும் முழுமையான காஸ்மிக் எனர்ஜி ஆகியவற்றின் சக்தியால் ஒரு பரிமாற்ற அனுபவத்தில் நீங்கள் சூழப்படுவீர்கள். இந்த குணப்படுத்தும் ஆற்றல்களால் புத்துணர்ச்சியுடன், உங்கள் உயர்ந்த திறனுடன் குடும்ப வாழ்க்கையில் வெற்றி காண்பீர்கள்.

அனைவரும் புனிதமான குகை கோவிலில் உள்ள ஆழ்ந்த உண்மைகளை பெற்று பரம ஆனந்தத்தை ஏற்றுக் கொள்ள வரவேற்கின்றோம். குடும்ப, சமுதாய ஒற்றுமை மற்றும் தேச நலனுக்கான இந்த அதிசயமான குகை கோவில் தரிசனம் அவசியம்.

இந்த கொலு அனைவர் நல் வாழ்க்கைக்கும் அம்பாள் கொடுத்த பரிசு. பாரதிய கலாச்சாரம் = நற்பண்புகள், தேசியம், தெய்வீகம் & ஆனந்த வாழ்க்கை. Visit Our Golu & Regain your Wisdom. ஆனந்த நவராத்திரி வாழ்த்துக்கள்.

அதிரகசிய வாழ்க்கை வழிகாட்டி டாக்டர் பத்ரி நாராயணன் — குருஜி சத்ய பிரணவ யோகி, சென்னையின் கே.கே.நகரில் உள்ள தனது வீட்டு கொலுவுக்கு உங்களை அழைக்கிறேன். லொகேஷன் பற்றிய விவரங்களை பெற 95515 55898, 95000 64319 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


One thought on "பிரபஞ்ச சக்தி நிரம்பிய அதிசிய மஹாமாயா பொக்கிஷங்கள் நிறைந்த குகை கொலு"

  1. மிகச் சிறப்பான பதிவு, கொலு காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருந்தன. இதுபோன்ற கலெக்ஷன்களை எங்கும் பார்த்ததில்லை. உண்மையாகவே சக்தியும் அருளும் நிறைந்த இடமாக தோன்றுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

avani-avittam
  • ஆகஸ்ட் 9, 2025
ஆவணி அவிட்டம்: ஓர் ஆன்மிகப் புதுமை, ஒரு புதிய தொடக்கம்!
july-month-hindu-festivals
  • ஜூன் 30, 2025
ஜூலை 2025 மாதத்தில் வரும் முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள்
june-2025-hindu-festivals-and-vratams
  • மே 27, 2025
ஜூன் 2025 மாதத்தில் வரும் முக்கிய இந்து பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள்