×
Tuesday 11th of August 2026

மஹா சிவராத்திரி விரத மகிமை கவிதை வடிவில்


maha-shivaratri-sirappugal

மஹா சிவராத்திரி

அன்னை அம்பிகைக்கு ஒன்பது  ராத்திரி நவராத்திரி,
அப்பன் சிவனுக்கு ஒரே
ராத்திரி சிவராத்திரி….

மாதத்தில் ஒரு முறை
வரும் சிவராத்திரி
மாசிமாதம் வருவதோ
மஹா சிவராத்திரி….

சிவாய நம என விரதம்
இருப்போர்க்கெல்லாம்,
அபாயம் நீக்கும் ராத்திரி…

சிவ புராணங்களில்
உள்ள  கூற்றின் படி,
பல நிகழ்வுகள் நடந்த
ராத்திரி  சிவராத்திரி..

பிரளய காலத்தில்
பிரமனால் சிஷ்டித்த
அனைத்து  உயிர்களையும்
அழிவிலிருந்து காப்பாற்ற ,

அன்னை உமாதேவி
அன்போடு விரதமிருந்து
ஈசனை பூஜித்த ராத்திரி
இந்த சிவராத்திரி…..

தேவர்களும்  அசுரர்களும் பார்கடலை கடைந்தபோது
பொங்கிவந்த
ஆலகால விஷத்தை
அண்டத்தைக் காக்க  தன்
கண்டத்தில் ஏற்று
நீலகண்டனாய் மாறிய ராத்திரி இந்த சிவராத்திரி

பரமேஸ்வரனின்
இடப்பாகத்தை அன்னை
பார்வதி பெற்ற தினம்
இந்த சிவராத்திரி….

பிரம்ம தேவருக்கும்
திருமாலுக்கும் பெரும்
ஒளிபிழம்பாய்
லிங்கோத்பவராய்
காட்சி அளித்த தினம்
இந்த சிவராத்திரி…

அர்ஜுனன் சிவனை நினைத்து மூங்கில்காட்டில்,
தவம் புரிய,

அர்ஜுனனை அழிக்க
பன்றி உருவில் வந்த
அரக்கனை,  வேடன் உருவில் வந்த சிவபிரான் அழித்து,

அர்ஜுனனுக்கு
பாசுபதாஸ்திரம் அளித்த
நாள் இந்த சிவராத்திரி…

கண்ணப்பன் தன் கண்களை
ஈசனுக்கு கொடுத்து
முக்தி அடைந்த நாள்
இந்த சிவராத்திரி….

இந்திரன் தேவலோக
அதிபதியான நாளும்
இந்த சிவராத்திரியே…

குபேரன் செல்வத்தின்
அதிபதியான நாள்
இந்த சிவராத்திரி….

மார்கண்டேயனுக்காக
எமனை சிவபிரான்
காலால் உதைத்த நாள்
இந்த சிவராத்திரி…

புலிக்கு பயந்த வேடன்
வில்வ மரத்தில்
மேல்ஏறி அமர்ந்து  அச்சத்தில் இலைகளை  பறித்துப்  போட
கீழே இருந்த லிங்கத்தில்
மேல் பட்டு வேடன் முக்திபெற்ற
நாள் இந்த சிவராத்திரி…

வில்வ இலைகள்
சிவபிரானுக்கு உகந்ததாக
மாறிய நாளும்
இந்த சிவராத்திரி….

இன்பத்தையும்
மங்களத்தையும்
நிறைவான
வாழ்கையையும் தரும்
ராத்திரி இந்த சிவராத்திரி…..

எழுதியவர்: வெ. உமா

வெ. உமா
நன்றி: வெ. உமா

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

Vanakkam! I'm Uma...


One thought on "மஹா சிவராத்திரி விரத மகிமை கவிதை வடிவில்"

  1. ஆஹா அற்புதமான படைப்பு!!!! வாழ்ந்த வார்த்தைகள் இல்லை!!! தொடர்க உங்கள் இறைப்பணி!!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

Pithru Tharpanam
  • ஜூலை 6, 2026
ஆடி அமாவாசை
lord-murugan-soorasamharam
  • அக்டோபர் 16, 2025
சூரசம்ஹாரம்: முருகப்பெருமானின் வீர வெற்றியின் பெருமை
Golu at Chennai Padri Narayanan House
  • செப்டம்பர் 25, 2025
பிரபஞ்ச சக்தி நிரம்பிய அதிசிய மஹாமாயா பொக்கிஷங்கள் நிறைந்த குகை கொலு