Last updated on ஜூன் 2, 2025
Pithru Dosham
🛕 காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.
Pitru Dosha Mantra
ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்! சஹசிவ சூரியாய!
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா
🛕 பித்ரு தோஷம் உடையவர்கள் இதனை ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசையன்று தொடங்க வேண்டும். இதை முடிந்தவரை செய்துவர பாவங்கள் அனைத்தும் தீரும். தடைகள் அகன்று சுப காரியங்கள் நடக்கும்.
Pitru Dosha Temple
🛕
108 திவ்ய தேசங்களில் ஒன்றான
சிவபெருமான் நாவாய் முகுந்தன் என்று பெயர் கொண்டு அருள்பாலிக்கும் இத்தலம் பித்ரு பூஜை செய்ய சிறந்த தலமாக கருதப்படுகிறது.
இத்தலம் கேரளாவில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது.
🛕 இத்தல விருட்சத்தின் அடியில் பித்ருக்களுக்கு அமாவாசையன்று அன்னம் வைத்து வழிபடுகின்றனர். இங்கு பித்ரு பூஜை செய்தால் நல்ல பலன் அடையலாம்.
Pitru Dosha Parihara & Pithru Tharpanam Tamil
🛕 நம் முன்னோர்கள் இறந்த நேரம் மற்றும் திதிகளை குறித்து வைத்து அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது.
🛕 பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் செய்யும்போது காலை 7 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தின்போது தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. தர்ப்பணங்களை முறைப்படி சரியான நேரத்தில் செய்தால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.
🛕 பித்ருக்களுக்கு தர்ப்பணம் நதிகளின் கரைகளில் கொடுத்தால் அதற்கு அதிக சக்தி உண்டு. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது பல யாகங்களை செய்வதை விட மேலானதாகும். ஒரு ஆண்டிற்கு ஒருவர் 96 முறை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.
🛕 அமாவாசை மற்றும் சூரிய சந்திர கிரகணங்களில் பித்ருகளுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகுந்த பலன் உண்டு. அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.
🛕 பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு மற்றும் வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும்.
🛕 ஒருவருடம் நாம் பித்ருபூஜை செய்ய தவறிவிட்டால் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என கூறப்படுகிறது.
🛕 ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகவும் சக்தி உண்டு. இந்த நாளில் பித்ருக்களை சாந்தப்படுத்தினால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம். இந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும்.
🛕
திருவாதிரை, புனர்பூச நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் 12 வருடங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்த முடியும்.
இதைப் பதிவேற்றியவர்..
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →
Thank you for your valuable feedback!
Excellent, what a blog it is! This weblog gives valuable facts to us, keep it up.