×
Friday 25th of July 2025

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த சிவாலயங்கள்


Last updated on மே 29, 2025

Lord Shiva Temples Stand in a Straight Line in Tamil

Lord Shiva Temples Stand in a Straight Line in Tamil

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த சிவாலயங்கள்

🛕 இந்த பூவுலகில் நமது கவனத்துக்கு வராத விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.

🛕 எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

🛕 மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது..?

🛕 குறிப்பாக சொல்வதென்றால், இந்திய அளவில் அமைக்கப்பட்ட அந்த கோவில்கள் மிகவும் சரியாக ஒரே நேர்க்கோட்டில் அமைக்கப்பட்டுள்ள விதத்தை நாம் சாதாரணமான ஒரு நிகழ்வாக எடுத்துக்கொள்ள இயலாது. அதன் பின்னணியில் உள்ள அர்த்தங்கள் நம்மால் அறியப்பட்டால் நமது பல கேள்விகளுக்கான விடைகளும் தெரிய வரலாம். அத்தகைய கோவில்களில் சிலவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்:

Pancha Bootha Temples in Tamil

🛕 பஞ்சபூத ஸ்தலம்: பஞ்ச பூத தலங்களில் நிலம்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், நீர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில், நெருப்புதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், காற்றுகாளஹஸ்தி காளஹஸ்திநாதர் கோவில், ஆகாயம்சிதம்பரம் நடராஜர் கோவில் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

🛕 சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அவை நிர்மாணிக்கப்பட்ட காலகட்டத்தில் எவ்விதமான கருவிகள் அல்லது செயற்கைக்கோள் உதவிகள் இல்லாமல் சரியான தீர்க்க ரேகையில் அவற்றை நிர்மாணித்துள்ளனர்.

🛕 இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

🛕 கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.

Shiva Temples in Straight Line

79 டிகிரி தீர்க்க ரேகை கோவில்கள்

  1. கேதார்நாத் – கேதார்நாத் கோவில் (30.7352° N, 79.0669)
  2. காலேஷ்வரம் – காலேஷ்வரா முக்தீஷ்வர சுவாமி கோவில் (18.8110, 79.9067)
  3. காஞ்சிபுரம் – ஏகாம்பரநாதர் கோவில் (12.847604, 79.699798)
  4. திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர் கோவில் (10.853383, 78.705455)
  5. திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோவில் (12.231942, 79.067694)
  6. சிதம்பரம் – நடராஜர் கோவில் (11.399596, 79.693559)
  7. காளஹஸ்தி – காளஹஸ்திநாதர் கோவில் (13.749802, 79.698410)
  8. ராமேஸ்வரம் – ராமநாத சுவாமி கோவில் (9.2881, 79.3174)

 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்