- ஜூலை 27, 2026

எழுதியவர்: பாகவத சிரோன்மணி திருவையாறு ப்ரம்ஹஸ்ரீ ப்ரேம்நாத் பாகவதர்
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டம் 20-வது சர்க்கத்தின் 12-வது சுலோகம் (5.20.12), இராவணன் சீதா பிராட்டியிடம் தன் காதலை வெளிப்படுத்தி,தன் வசப்படுத்த முயன்று பேசிய வரிகள்.
சுலோகம்
इदं ते चारु सञ्जातं यौवनं व्यतिवर्तते ।यदतीतं पुनर्नैति स्रोतः शीघ्रमपामिव ॥
அர்த்தம்
“உன்னுடைய இந்த அழகான இளமைப் பருவம் வீணாகக் கடந்து செல்கிறது. வேகமாய் ஓடும் நதியின் நீர் ஒருமுறை கடந்து சென்றால் எப்படி மீண்டும் திரும்பாததோ, அதே போல கடந்து போன காலம் எப்போதுமே திரும்பி வராது.”
இளமைப் பருவம்: மனித வாழ்வில் மீளாத காலம்.
நதி நீர் உவமை: ஓடிய நதி நீர் பின்னோக்கி வராதது போல, கழிந்த காலம் எப்போதுமே திரும்பாது என்ற தத்துவத்தை இராவணன் சீதையிடம் கூறுகிறான் என்று ஆதி கவி ஸ்ரீவால்மீகி ரிஷி தன் கவிதா விலாஸத்தை அழகாக வெளிப்படுத்துகிறார்.
இதனை ஆய்ந்துநோக்கும் கால் கவியரசு கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது. அவர் எவ்வளவு ஆழ்ந்து ஸ்ரீவால்மீகியின் இராமாயணத்தைப் படித்து லயித்து தன் பாடல் வரிகளில் இதைக் கொணர்ந்துள்ளார் என்பதை அறிய வியப்பாக இருக்கிறது!
“போலீஸ்காரன் மகள்” (1962 ம் ஆண்டு) கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் வரிகள்:
ஆண்டொன்று போனால்…
வயதொன்று போகும்…
அதற்கு முன்னாலே
வா வா வா வா…
அழகுடன் இளமை
தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே
வா வா வா…
ஸ்ரீவால்மீகியின் வரிகளுடன் எப்படி ஒத்து இருக்கிறது என்பது அறியும்போது கவியரசு கண்ணதாசன் எவ்வளவு தூரம் வால்மீகியின் காவ்யத்தில் ஈடுபாடு இருந்தது
என்பதை அறிய வியப்பாக இருக்கிறது!
Also, read: ஸ்ரீ நாராயணதீர்த்தரும் பக்தி மார்க்கமும்