- ஜூலை 9, 2026

“திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்” என்ற இந்தப் பாடல், கேட்பவர்களை அப்படியே வங்கக் கடலோரத்தில் வீற்றிருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கே அழைத்துச் செல்லும் ஒரு தெய்வீகப் பொக்கிஷமாகும். ‘தெய்வம்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பக்திப் பாடல், செந்தில்நாதனின் கடலோர ஆலயத்தின் மகிமையைச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கு ஒரு ஆன்மீக கீதமாக விளங்கும் இந்தப் பாடலைக் கேட்கும் போது கிடைக்கும் மன அமைதியும், தெய்வீக உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
திரைப்படம்: தெய்வம்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்..

அசுரரை வென்ற இடம்; அது தேவரைக் காத்த இடம்..
ஆவணி மாசியிலும்; வரும் ஐப்பசித் திங்களிலும்..
அன்பர் திருநாள் காணுமிடம்.. அன்பர் திருநாள் காணுமிடம்..

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று..
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று..
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று..
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று..
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று..
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு..

ஆறுமுகம் இங்கு…!
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்..
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா..
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா..

நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா.. முருகா..
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா.. முருகா..
வருவாய்.. அருள் தருவாய்.. முருகா…!