×
Friday 25th of July 2025

சிவ ரக்க்ஷா ஸ்தோத்திரம்


Last updated on மே 29, 2025

sivaraksha-sthothram

Siva Raksha Stotram

சிவ ரக்க்ஷா ஸ்தோத்திரம்

இந்த சிவ ரக்க்ஷா ஸ்தோத்திரம் மிகவும் அபூர்வமானது. இதற்கு சிவ அபயங்கர ஸ்தோத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை யோகீஸ்வரர் யாக்ஞவல்க்யரின் கனவில் ஸ்ரீமன்நாராயணன் சொன்னதை காலையில் எழுந்ததும் அவருக்குக் கூறப்பட்ட படியே எழுதினார். சிவநாமமே பாதுகாப்பு அளிக்கக் கூடியது. அதிலும் ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஸ்தோத்திரங்கள் சக்தி கொண்டவை. இதுவோ அதையும் மீறிய தெய்வ வாக்கு. இதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் ஸ்ரீமன் நாராயணன் திருவாக்கு. ஈசனை நினைத்து இதனைப் படிப்பவர் கஷ்டம் விலகும் என்பது அவர் வாக்கு.இந்த ஸ்தோத்திரத்தை சிவ ஆலயத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் எதிரில் நின்று கொண்டு பாராயணம் செய்பவர்களுக்கும் தினம் மாலையில் தங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து இதனைப் பாராயணம் செய்பவர்கள் தனக்கு வேண்டியதை அடைவார்கள். பூத, பிசாசங்கள் நெருங்காது. நவக்ரஹங்களின் பாதகநிலை விலகி எல்லா வசியமும் ஏற்பட்டு கடைசியில் சிவ சாயுஜ்யம் அடைவார்கள்.

சிவ அபயங்கர ஸ்தோத்திரம் – ஸ்ரீ சிவ ரக்க்ஷா ஸ்தோத்திரம்

ஓம் அஸ்ய ஸ்ரீ சிவ ரக்க்ஷா ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய

யாக்ஞாவல்க்ய ருஷி:
அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சதாசிவோ தேவதா
ஸ்ரீஸதாசிவ ப்ரீத்யர்த்தம்
சிவ ரக்க்ஷா ஸ்தோத்ர ஜபே விநியோக:

சரிதம் தேவ தேவஸ்ய மஹா தேவஸ்ய பாவனம்
அபாரம் பரமோதாரம் சதுர் வர்கஸ்ய சாதனம்.

பொருள்:
மகாதேவனால் அருளப்பட்ட தேவதேவனின் இந்தப் புராணம் உயர்ந்த மேலான துதி. ஓருவனுக்கு நான்கு வகையான சம்பத்துக்களையும் (தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்) தரவல்லது.

 

கௌரி விநாயகோ பேதம் பஞ்சவதக்த்ரம் த்ரிநேத்ரகம்
சிவம் த்யாத்வா தசபுஜம் சிவரக்ஷாம் படேந்நர:

பொருள்:
உமையாளொடும் விநாயகரோடு சேர்ந்து அருள்பவனை, ஐந்து முகங்களையும், முக்கண்களையும் உடைய சிவபெருமானைத் தியானித்த பிறகு அடியார்கள் இந்த சிவகவசத்தைப் பாராயணம் செய்வது சிறந்தது.

 

கங்காதரச் சிர; பாது பாலம் அர்தேந்து சேகர
நயனே மதன த்வம்ஸீ கர்ணௌ ஸர்ப்ப விபூஷண:

பொருள்:
கங்கையை சிரசில் தாங்கியவன் என் தலையைக் காக்கட்டும. இளம்பிறையை சூடி இருப்பவன் என் நெற்றியைக் காக்கட்டும். மன்மதனை அழித்த நாதன் என் கண்களைக் காக்கட்டும். நாகாபரணம் பூண்டவன் என் காதுகளைக் காக்கட்டும்.

க்ராணம் பாது புரா ராத்ரி: முகம் பாது ஜகத்பதி:
ஜிஹ்வாம் வாகேஸ்வர: பாது கந்தராம் சிதி கந்தர:

பொருள்:
எனது மூக்கு முப்புரம் எரித்தவனின் பாதுகாப்பில் இருப்பதாக; எனது முகம் புவனாதிபதியின் பாதுகாப்பில் இருப்பதாக; எனது நாக்கு அக்ஷரங்களின் தலைவனின் பாதுகாப்பில் இருப்பதாக; எனது கழுத்து குகைகளில் வசிப்பவனாகிய சிவபெருமானின் பாதுகாப்பில் இருப்பதாக.

ஸ்ரீகண்ட: பாதுமே கண்டம் ஸ்கந்தௌ விச்வோ துரந்தர
புஜௌ பூபார ஸம்ஹர்த்தா கரௌபாது பினாகத்ருக்

பொருள்:
ஶ்ரீநீலகண்டன் என் கழுத்தைக் காப்பானாக; அகிலத்தின் தீமைகளை அழிப்பவன் என் தோள்களைக் காப்பானாக; உலகின் பாரங்களைக் கடந்தவன் என் புஜங்களைக் காப்பானாக; பினாக வில்லை ஏந்தியவன் என் கைகளைக் காப்பானாக.

ஹ்ருதயம் சங்கர: பாது ஜடரம் கிரிஜாபதி:
நாபிம் ம்ருத்யுஞ்ஜய: பாது கடிவ் வ்யாக்ர ஜிநாம்பர:

பொருள்:

இதயத்தை சங்கரன் காக்கட்டும்; வயிற்றை கிரிஜா மணாளன் காக்கட்டும்; நாபிக்கமலத்தை மரணத்தை வென்றவன் காக்கட்டும்; இடுப்பைப் புலித்தோலாடை அணிந்தவன் காக்கட்டும்.

 

ஸக்திநீ பாது தீனார்த்த: சரணாகத வத்ஸல:
உரு மஹேஸ்வர: பாது ஜானு நீ ஜகதீஸ்வர.

பொருள்:
இறைவா! துன்பத்தில் உழல்பவர்கள் மீது உன் கருணை மழையைப் பொழிவாயாக! சரணடையும் அடியார்களுக்கு இனியனான ஈசன் என் மூட்டுக்களைக் காப்பானாக; முழங்கால்களை ஜெகதீஷ்வரன் காப்பானாக.

 

ஜங்கே பாது ஜகத் கர்த்தா குல்பௌ பாது கணாதிப:
சரணௌ கருணா ஸிந்து: ஸர்வாங்கானி ஸதாசிவ:

பொருள்:
புறங்கால்களை உலகின் சிருஷ்டிகர்த்தா காக்கட்டும். கணுக்கால்களைக் கணங்களின் அதிபதி காக்கட்டும். உடலின் அனைத்து அங்கங்களையும் சதாசிவன் காக்கட்டும்.

 

ஏதாம் சிவ பலோ பேதாம் ரக்ஷாம் ய ஸ்ஸுக்ருதீ படேத்
ஸ புக்த்வா ஸகலான் காமான் சிவ ஸாயுஜ்யமாப்னுயாத்.

பொருள்:
சிவபெருமானால் அருளப்பட்ட இந்த கவசத்தைப் படிக்கும் பேறு பெற்றவர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். சிவலோக பதவி கிட்டும்.

 

க்ரஹ பூத பிசாசாத்யா த்ரைலோக்யே விசரந்தி யே
தூராதாசு பலாயந்தே சிவ நாமா பி ரக்ஷணாத்.

பொருள்:
சிவநாமங்களால் ஆன இந்தக் கவசத்தைப் படிப்போருக்கு கிரஹங்களால் வரும் துன்பம் நீங்கும். மேலும் மூவுலகிலும் சஞ்சரிக்கும் பூதபிசாசுகளும் தூரதூரமாய் ஓடிவிடும்.

 

அபயங்கர நாமேதம் கவசம் பார்வதீபதே:
பக்த்யா பிபர்த்திய: கண்டே தஸ்ய வச்யம் ஜகத்த்ரயம்.

இமாம் நாராயண ஸ்வப்னே சிவரக்ஷாம் யதாதிசத்
ப்ராதருத்தாய யோகீந்த்ரோ யாக்ஞவல்க்ய ஸ்ததாலிகத்.

இதி ஸ்ரீ யாஞ்யவல்க்ய ப்ரோக்தம் அபயங்கரம் சிவ ரக்க்ஷா ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.


 

Also, read

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


One thought on "சிவ ரக்க்ஷா ஸ்தோத்திரம்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
shani chalisa lyrics in english with meaning
  • ஜூலை 2, 2025
சனி சாலிசா: சனி பகவானின் அருளைப் பெறவும்
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்