பொருள்: என்போன்ற சாமான்யர்களுக்காக ஜனன மரணமென்கிற சம்சார சாகரம் என்பது இவ்வளவே என்று கூறுவதுபோல், எவரால் தன் இடைப் பிரதேசம்தன் கைகளால் தாங்கப்படுகிறதோ, பிரம்மாவாசம் செய்வதற்காக தனது தொப்புள்கொடி தாங்கியிருப்பவர் எவரோ அந்த அருவமான பரப்பிரமத்தின் அடையாள உருவமான பாண்டுரங்கனை நான் பூஜிக்கின்றேன். தன்னை நம்பும் பக்தர்களுக்கு சம்சார சாகரம் சிறு குட்டையைப் போன்றதாகிவிடும் என்பதைக் காட்ட இடுப்பளவை சுட்டுவது போன்ற முத்திரை காட்டும் பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.
பொருள்: பிறப்பற்றவர், ருக்மணியின் உயிரைத் தழைக்கச் செய்பவர், பரமபத நிலையானவர், விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்றுக்கும் அப்பாற்ப்பட்ட ஆத்மாநுபூதியான நான்காவது நிலையில் இருக்கும் ஒரே ஒருவர், அருட்பொலிவானவர், அடியார்களின் துயரை அழிப்பவர், தேவாதி தேவர், அருவமான பரப் பிரம்மத்தின் உருவ அடையாளமாக இருப்பவரான பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.
ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம்! பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி!!
பொருள்: புண்ணியத்தைக் கொடுக்கும் பாண்டுரங்கன் மீதான இந்த துதியை மனம் ஒன்றி தினமும் படிக்கும் எனக்கு, சகல சௌபாக்யமும் பெற்று, ஆரோக்கியமாய் வாழ்ந்து முடிவில் ஜனன மரணமாகிய இந்த சம்சார கடலைக் கடந்து, ஹரியின் ஆலயமான வைகுண்டத்தை நிலையான இருப்பிடமாக கொள்ள அருள்புரிவாய் பாண்டுரங்கா.
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.