×
Friday 25th of July 2025

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்


Last updated on ஜூன் 20, 2025

lalitha pancharatnam lyrics in tamil

Lalitha Pancharatnam Lyrics in Tamil with Meaning

ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களால் இயற்றப்பட்ட ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் என்பது, அன்னை லலிதா திரிபுரசுந்தரியைப் போற்றும் ஐந்து ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அற்புதமான ஸ்தோத்திரம் ஆகும்.

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்

ப்ராத:ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம் !
ஆகர்ண தீர்க்க நயனம் மணி குண்டலாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல பாலதேசம் || (1)

காலை வேளையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழமொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களாலான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது.

ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீய லஸதங்குளி பல்லவாட்யாம் !
மாணிக்ய ஹேமவல்யாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷுசாபகுஸுமேஷுஸ்ருணீர்ததானாம் !! (2)

காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்ற கைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன.

ப்ராதர் நமாமி லலிதா சரணாரவிந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம் !
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனீயம்
பத்மாங்குசத்வஜ ஸுதர்சன லாஞ்சநாட்யம் II (3)

பக்தர்களின் இஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக் கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.

ப்ராதஸ் ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்யவிபவாம் கருணானவத்யாம் !
விச்வஸ்ய ஸ்ருஷ்டிவிலயஸ்திதி ஹேதுபூதாம்
விஸ்வேஸ்வரீம் நிகம வாங் மனஸாதி தூராம் II (4)

உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்.

ப்ராதர் வதாமி லலிதே தவ புண்யநாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II (5)

ஹே லலிதாம்பிகே!. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன.

ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸெளபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே I
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னர்
வித்யாம் ச்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்திம் II (6)

ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங்கூட – காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள்.

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் முற்றிற்று

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னத்தின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள்

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது மிகுந்த பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. இதன் முக்கிய பலன்கள்:

  • சௌபாக்கியம்: அன்னை லலிதா தேவி பக்தர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், சௌபாக்கியத்தையும் அருளுகிறாள்.
  • கல்வி (வித்யா): படிப்பவர்களுக்கு கல்வி ஞானம் பெருகும்.
  • செல்வம் (ஸ்ரீ): நிதி நிலை மேம்பட்டு, செல்வம் பெருகும்.
  • தூய மகிழ்ச்சி (விமல சௌக்யம்): மனம் மற்றும் உடல் பிணிகள் நீங்கி, தூய மகிழ்ச்சியும், மன அமைதியும் கிடைக்கும்.
  • புகழ் (அனந்த கீர்த்தி): நல்ல புகழையும், கீர்த்தியையும் அடையலாம்.
  • இஷ்ட சித்திகள்: பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கும், சம்சாரக் கடலைக் கடப்பதற்கும் அன்னை துணை புரிகிறாள்.

Also, read

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
shani chalisa lyrics in english with meaning
  • ஜூலை 2, 2025
சனி சாலிசா: சனி பகவானின் அருளைப் பெறவும்
kali-kavacham
  • ஜூன் 23, 2025
ஸ்ரீ காளியம்மன் கவசம்