×
Friday 5th of December 2025

108 உமையம்மை வழிபாடு


108 Potri of Umaiyammai Vazhipadu

உமையம்மை வழிபாடு

உமையம்மை வழிபாடு என்பது அன்னை பராசக்தியின் கருணை வடிவங்களில் ஒன்றான பார்வதி தேவியை வணங்கும் முறையாகும். இவரே சிவபெருமானின் பாதியாய் விளங்கும் திருநிலை நாயகியாக, உலக உயிர்கள் அனைத்திற்கும் அன்பு, ஆற்றல், மற்றும் செழிப்பை அருள்பவராகத் திகழ்கிறார். கௌரி, மனோன்மணி, சிவகாமி போன்ற பல திருநாமங்களில் போற்றப்படும் உமையம்மையின் வழிபாட்டில், இந்த 108 போற்றிகளைச் சொல்வது, துன்பங்கள் நீங்கி, நல்வாழ்வு, செல்வம், கல்வி ஆகியவற்றைப் பெற்று, முக்திப் பேற்றை அடைய உதவும் ஒரு சிறந்த வழியாகும்.

உமையம்மை 108 போற்றிகள்

1. திருநிலை நாயகி தேவி போற்றி
2. கருந்தார்க் குழலுமை கௌரி போற்றி
3. மங்கள் நாயகி மாமணி போற்றி
4. எங்கும் நிறைந்த இன்பொருள் போற்றி
5. இளமை நாயகி எந்தாய் போற்றி
6. வளமை நல்கும் வல்லியே போற்றி
7. யாழைப் போல்மொழி யாயே போற்றி
8. பேழை வயிற்றனைப் பெற்றோய் போற்றி
9. பால்வளை நாயகி பார்பதி போற்றி

10. சூல்கொண் டுலகெலாம் தோற்றினாய் போற்றி
11. அறம்வளர் நாயகி அம்மே போற்றி
12. மறங்கடி கடைக்கண் மனோன்மணி போற்றி
13. போகம் ஆர்த்த பொற்கொடி போற்றி
14. பாகப் பிரியாப் பராபரை போற்றி
15. உலகுயிர் வளர்க்கும் ஒருத்தி போற்றி
16. மலர்தல் குவிதலில் மணமலர் போற்றி
17. கத்து கடல்வரா முத்தே போற்றி
18. நத்தும் அடியார் நட்பே போற்றி

19. கற்றவர்க் கின்பக் கடலே போற்றி
20. மற்றவர்க் கெட்டா வான்வெளி போற்றி
21. சிவகாமி யம்மைச் செல்வி போற்றி
22. புவனப் பொருள்களிற் பொருந்தினாய் போற்றி
23. வலிதா யத்தமர் வண்தாய் போற்றி
24. கலிசூ ழாவகைக் காப்பாய் போற்றி
25. வண்டுவார் சூழலி மாதா போற்றி
26. செண்டாடும் விடைச் சிவையே போற்றி
27. உண்ணா முலையெம் உயர்தாய் போற்றி

28. கண்ணார் கழுகுக் கழுத்தாய் போற்றி
29. பெருத்துறை அரசி பெண்கனி போற்றி
30. முருந்தேர் முறுவல் முதல்வி போற்றி
31. வேற்கண் அம்மை மீன்கணி போற்றி
32. நாற்பெரும் பயன்தரும் நங்காய் போற்றி
33. மின்னொளியம்மையாம் விளக்கே போற்றி
34. மன்னொளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
35. பச்சை நிறத்துப் பைங்கிளி போற்றி
36. இச்சைக் கிசைந்த இன்பே போற்றி

37. குவளைக் கண்மலர்க் கொம்பே போற்றி
38. தவளவெண் நீற்றோன் தலைவி போற்றி
39. பவள வரைமேற் பசுங்கொடி போற்றி
40. துவளிடை சிறுத்த தாயோய் போற்றி
41. குயில் மொழி மிழற்றும் மயிலியல் போற்றி
42. எயில்மூன் றெரித்த இலங்கிழை போற்றி
43. தையல் நாயகித் தாயே போற்றி
44. வையமீன் றளிக்கும் வளத்தாய் போற்றி
45. மெய்யுரு கடியர் விரும்பே போற்றி

46. ஆவுடை நாயகி அன்னாய் போற்றி
47. தேவிற் சிறந்த திருமகள் போற்றி
48. தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
49. அண்டர் அருந்தா அமிழ்தே போற்றி
50. பனங்காட் டூருறை பவளே போற்றி
51. அனங்காட் டும்நடை அழகி போற்றி
52. தமிழினும் இனிமை சார்தோய் போற்றி
53. குமிழ்தா மரைமலர் கொடியிடை போற்றி
54. அமர குமரி ஆனாய் போற்றி

55. இமவான் பெற்ற இளையாய் போற்றி
56. மலையத் துவசன் மகளே போற்றி
57. கலையாய்க் கனிந்த தலைமகள் போற்றி
58. தக்கன் மகளாய்த் தரிததாய் போற்றி
59. முக்கட் சுடரின் முதல்வி போற்றி
60. அலைமகள் அடிபணி நலமகள் போற்றி
61. கலைமகள் தலைபணி கருத்தே போற்றி
62. திருவார் கடலில் திகழ்வாய் போற்றி
63. அருமறைப் பொருளாம் ஆதி போற்றி

64. உயிருள் ஓவிய உருவே போற்றி
65. செயிரில் காட்சிச் சேயிழை போற்றி
66. செந்தமிழ்ப் பாவின் தெளிவே போற்றி
67. எந்தம் மனத்தில் இருப்பாய் போற்றி
68. நீலி சூலி நெடுங்கணி போற்றி
69. மேலை வினைகடி விமலை போற்றி
70. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
71. வெளிக்குள் வெளியாய் மிளிர்வாய் போற்றி
72. நீல மேனி வாலிழை போற்றி

73. கோலக் கொண்டல் நிறத்தாய் போற்றி
74. மண்முதல் ஐம்பொருள் வளனே போற்றி
75. பெண் ஆண் அலியுருப் பெற்றோய் போற்றி
76. ஆப்பனூர் மேவிய ஆத்தாள் போற்றி
77. மூப்பிறப் பற்ற முதல்வி போற்றி
78. எண்குணத் தொருவன் இடத்தோய் போற்றி
79. பண்கனி மென்சொற் பாவாய் போற்றி
80. பச்சிளம் பெண்ணாய்ப் பகர்வோய் போற்றி
81. எச்சம யத்தும் இசைந்தாய் போற்றி

82. யாழிசைப் பண்ணா யமர்ந்தாய் போற்றி
83. ஏழிசைப் பயனாய் இருந்தாய் போற்றி
84. அருள்மலி கண்ணுடை ஆயே போற்றி
85. மருளினர் காணா வான்பொருள் போற்றி
86. வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை போற்றி
87. பற்றிலா நற்றவர் பற்றே போற்றி
88. இழையாய் நன்மை இழைப்பாய் போற்றி
89. குழையாய் அகத்தைக் குழைப்பாய் போற்றி
90. திருநணா மங்கைச் செல்வி போற்றி

91. உருவும் திருவும் உடையாய் போற்றி
92. அருந்தவர்க் குதவும் அருளே போற்றி
93. அருந்துறைத்தமிழின் அமைபொருள் போற்றி
94. கருநிற ஒளிவளர் கடலே போற்றி
95. பருவரை மருந்தே பகவதி பாற்றி
96. சூளா மணியே சுடரொளி போற்றி
97. ஆளாம் அடியர்க் கருள்வாய் போற்றி
98. மதுரை அரசியாய் வந்தோய் போற்றி
99. குதிரைச் சேவகன் கொண்டாய் போற்றி

100. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
101. பலநல் லனநீ படைத்தருள் போற்றி
102. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
103. பயிர்கள் பயன்தரப் பரிந்தருள் போற்றி
104. செல்வம் கல்விச் சிறப்பருள் போற்றி
105. நல்லன் பொழுக்கம் நல்குவாய் போற்றி
106. போற்றி உன் பொன்னடிப் போது போற்றி
107. போற்றி புகழிநிறை திருத்தாள் போற்றி
108. கற்பக வல்லி யுன் கழிலிணை போற்றி

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thirumoolar-thirumanthiram
  • டிசம்பர் 5, 2025
திருமூலர் எழுதிய திருமந்திரம்: ஒன்பதாம் தந்திரம்
thirumoolar-thirumanthiram
  • நவம்பர் 24, 2025
திருமூலர் எழுதிய திருமந்திரம்: எட்டாம் தந்திரம்
thirumoolar-thirumanthiram
  • நவம்பர் 22, 2025
திருமூலர் எழுதிய திருமந்திரம்: ஏழாம் தந்திரம்