×
Wednesday 25th of February 2026

மலை போன்ற உருவம் பொருந்தியவன் மதிப்பு சக்திசிவம் அருளல்


Last updated on மே 28, 2025

M-30A

எம்-30எ என்ற அடையாள எண்ணுடைய சிந்து சமவெளி முத்திரை இறந்தவர் மேடு என்னும் மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள தொல்பொருள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

இந்த முத்திரையைப் பற்றியும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியைப் பற்றியும் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது,

இந்த முத்திரையின் நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ தொகுப்பு எண் 1, பக்கம் – 17லும், மற்றக் குறிப்புகள் பக்கம் – 366லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சதுர வடிவிலான இந்த முத்திரையின் மேல் பகுதியில் 12 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது எழுத்தும், 3-ஆவது எழுத்தும், 4-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன.  7-ஆவது எழுத்தும், 8-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன. 11-ஆவது எழுத்தும், 12-ஆவது எழுத்தும் இணைந்துள்ளன. கீழ்பகுதியில் ஒத்தக்கொம்பன் என்னும் ஒத்தக்கோடு நந்தியின் உருவமும், பரமஞானம் என்பதைக் ஒரு குறிக்கும் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த முத்திரை துணி, மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக- ப + ( ரு + ரூ + ப) + ண + ன் + (எ + ண்) + சோ + சி + (ரு + ள் ) . பருரூபணன் எண் சோ சி (அ)ருள் எனப் படிக்கப்படுகின்றன.

பருரூபணன்’ என்பதற்கு மலை போன்ற உருவம் பொருந்தியவன் எனவும், ‘எண்’ என்பதற்கு மதிப்பு, எளிமை எனவும், ‘சோ’ என்பதற்கு உமை என்னும் சக்தி எனவும், ‘சி’ என்பதற்கு சிவம் எனவும், ‘(அ)ருள்’ என்பதற்கு அருளல், கருணை எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

பொருள்மலை போன்ற உருவம் பொருந்தியவன் மதிப்பு சக்திசிவம் அருளல்.

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

H-2204A,B&C
  • மார்ச் 29, 2025
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
M-1098A
  • மார்ச் 28, 2025
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்
M-1100A
  • மார்ச் 28, 2025
மலை உருவக் கோயில் / கடல் வடிவ மருதநிலத்தூர்
×

🔕 விளம்பரமில்லா ஆன்மீக அனுபவம்

விளம்பரங்கள் இல்லாமல் ஆன்மீக உள்ளடக்கங்களை வாசிக்க விரும்புகிறீர்களா?

₹949 1 Year
₹649 6 Months
₹349 3 Months
₹149 1 Month
WhatsApp மூலம் Subscribe செய்யவும்
🔕