×
Saturday 26th of July 2025

அட்சதை என்றால் என்ன?


Last updated on ஜூன் 24, 2025

Atchathai in Tamil

Table of Contents

Atchathai in Tamil

அட்சதை என்பது அரிசியுடன் மஞ்சளும் கலந்த கலவை. திருமண விழாக்களின் போது, புதுமணத் தம்பதியரின் தலையில் தெளிக்கப்படும் புனித அரிசியாக, அவர்களை ஆசீர்வதிக்கும் செயலாக இது கருதப்படுகிறது. நம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் இப்படி செய்து வருகிறோம், மேலும் அட்சதை தெளிப்பது திருமணமான தம்பதியரின் வாழ்க்கையில் பெரும் செழிப்பை தரும் என்று நம்பப்படுகிறது. கோவில்களில் ஏதேனும் பூஜைகள், ஹோமங்களில் கலந்து கொள்ளும் போது அட்சதை வழங்கப்படும்.

பூஜைகள் அல்லது பண்டிகைகளின் கொண்டாட்டத்தின் போது, குறிப்பாக நவராத்திரி பூஜை பண்டிகை நாட்களில் பயன்படுத்தப்படுகிறது. மந்த்ராலயம் மற்றும் பிற ராகவேந்திர மடங்களில் துளசி தீர்த்தத்துடன் அட்சதை  விநியோகிக்கப்படும். பெரும்பாலான பக்தர்கள் அட்சதை பிரசாதத்தை பச்சரிசியுடன் கலந்து சமைத்த பின், நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சாப்பிடுவார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஒரு முறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சர் தாமஸ் மன்றோவிடம் கோவில் சொத்துக்களை கையகப்படுத்துவதற்காக மந்த்ராலயம் கோவிலைப் பற்றி விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். சர் தாமஸ் மன்றோ மடத்திற்குள் சென்றபோது, குரு ராகவேந்திரர் அவர் முன் தோன்றி, அவரை ஆசீர்வதித்து, அட்சதை  கொடுத்தார், மேலும் மடத்தின் சொத்து விவரங்களையும் முறையாக விளக்கினார்.

ஆனால் குரு ராகவேந்திரர் மன்றோவின் கண்முன்னே மட்டுமே காணப்பட்டார், அவர் மற்றவர்களுக்குத் தெரியவில்லை. குரு ராகவேந்திரரின் திருக்கரங்களில் இருந்து அட்சதையைப் பெற்ற பிறகு, தனக்கு உணவு சமைக்கும் போது பிரசாதத்தை சேர்க்குமாறு தனது ஊழியரிடம் கூறினார். உணவு உண்ட பிறகு, மிகுந்த மனநிம்மதியடைந்த அவர், உடனடியாக மடத்தின் சொத்துக்களை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கையகப்படுத்த வேண்டாம் என்று தனது உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.

புனிதமான அட்சதையில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக ஐதீகம். அட்சதையை நம் தலையில் போட வைப்பதன் மூலமும் பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். நமது புனித இந்து மதத்தில் நிறைய புனிதமான விஷயங்கள் உள்ளன. அதில், அட்சதை மிக முக்கியமான புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது, இது பெரும்பாலும் மங்களகரமான நாட்களிலும் முக்கியமான திருவிழா நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

எழுதியவர்: ரா. ஹரிசங்கர்

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

boy-baby-names-in-tamil
  • ஜூன் 19, 2025
ஆண் குழந்தை தமிழ்ப் பெயர்கள் [Boy Baby Tamil Names]
Aspicious Times
  • ஏப்ரல் 23, 2025
நல்ல நேரம், குளிகை, ராகு காலம், கௌரி நல்ல நேரம் & எமகண்டம்: ஒரு முழுமையான பார்வை
sri-matha-trust
  • ஏப்ரல் 1, 2025
ஸ்ரீ மாதா அறக்கட்டளை