-
மார்ச் 28, 2025
-
in
சமையல்
-
0
-
3172
Last updated on ஏப்ரல் 28, 2025
Vendakkai Vathal & Pagarkai Vathal Recipe in Tamil
வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் வத்தல் செய்யும் போது தயிர் சேர்த்து செய்ய வேண்டும்.
வெண்டைக்காயில் தயிர் சேர்ப்பது அதன் கொழகொழப்பு தன்மையை நீக்கும்.
பாகற்காயில் தயிர் சேர்ப்பது வாசனையாகவும், கசப்பில்லாமலும் இருக்கும்.
பாகற்காய் வத்தல் சேர்த்து குழம்பு செய்யும் போது அதனுடன் வேறு காய் வத்தல் சேர்த்து செய்ய வேண்டாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் -1/4 கி
பாகற்காய் -1/4 கி
புளித்த தயிர் – 1 கப்
உப்பு-தேவைக்கு
செய்முறை
- காய்களை கழுவி வெண்டைக்காயை நடுத்தர துண்டுகளாகவும், பாகற்காயை வட்டமாகவும் நறுக்கவும்.
- பெரிய பாகற்காயில் செய்யும் போது நறுக்கும் போது விதைகளை நீக்கவும்.
- நறுக்கிய வெண்டைக்காயினை மட்டும் 1 நாள் முழுக்க வெயிலில் காய வைக்கவும்.
- தயிரை உப்பு சேர்த்து நன்கு கடைந்துக் கொள்ளவும்.
- மாலையில் காய வைத்த வெண்டைக்காயில் கடைந்த 1/2 கப் தயிர் சேர்த்து ஊறவைக்கவும்.
- பாகற்காயில் மீதி 1/2 கப் தயிர் சேர்த்து கலக்கி 1 நாள் ஊறவைக்கவும்.
- மறுநாள் வெயிலில் காய்களை மட்டும் எடுத்து காயவைக்கவும். மாலையில் திரும்ப தயிரில் ஊறபோடவும்.
- இதே போல் தயிர் வற்றும் வரை செய்து பின் நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும்.
- காய்கள் இல்லாத சமயத்தில் இந்த வத்தல் போட்டு குழம்பு செய்யலாம்.
இதைப் பதிவேற்றியவர்..
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →