கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி?
மார்ச் 28, 2025
in
சமையல்
0
3392
Last updated on மே 21, 2025
Kothamalli Thokku Recipe in Tamil
கொத்தமல்லி தொக்கு ஒருமுறை சுவைத்த போது ரொம்ப பிடித்தது . செய்தும் பார்த்தாச்சு!
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி தழை – 2 கட்டு
காய்ந்த மிளகாய் – 8
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 3/4 டீஸ்பூன்
இஞ்சி – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கடுகு – 1/2 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காயளவு
நல்லெண்ணெய் – 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
மல்லித்தழையில் உள்ள தடினமான தண்டுபகுதியை நீக்கவும்.
கொத்தமல்லிதழையை மண்ணில்லாமல் அலசி, துணியில் ஈரம் போக உலர்த்தவும்.
கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் வறுக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் இஞ்சியை வறுத்தபின் கொத்தமல்லி தழையை சேர்த்து வதக்கவும். புளியையும் சேர்த்து லேசாக வதக்கியபின் அடுப்பை அணைக்கவும்.
முதலில் மிக்ஸியில் மிளகாய் + வெந்தயம் + உப்பு + பெருங்காயப் பொடி சேர்த்து முதலில் பொடிக்கவும்.
அதன்பின் கொத்தமல்லிதழை, இஞ்சி, புளி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
கொரகொரப்பாக அரைக்கவும். அதில் தான் சுவையே இருக்கின்றது.
பின் மீதமுள்ள எண்ணெயில் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த விழுதினை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
நன்கு ஆறியதும் காற்றுபுகாத பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
பின் குறிப்பு
இதனை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம் அல்லது சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
தயிர் சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
இதைப் பதிவேற்றியவர்..
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →