How To Make Gulkand in Tamil?
குல்கந்து செய்வதற்கு பன்னீர் ரோஜாக்கள் வேண்டும். இந்த ரோஜாக்களை அல்ஜீரியா தோழியின் வீட்டில் கேட்டபோது எனக்காக செடியில் பூத்திருந்த அனைத்து பூக்களையும் பறித்து கொடுத்தாங்க.
அவர்களும் இதனை என்ன செய்வீங்கன்னு கேட்டபோது இதனுடைய நன்மைகளையும், குல்கந்து செய்முறையும் சொன்னபோது அவர்களும் செய்வதாக சொன்னாங்க.
தேவையான பொருட்கள்
பன்னீர் ரோஜா இதழ்கள் – 4 கப்
நாட்டு சர்க்கரை – 1 கப்
Gulkand Recipe in Tamil
குல்கந்து செய்முறை
- ரோஜா இதழ்களை தனித்தனியாக பிரித்து நன்கு அலசி ஈரம்போக துணியில் உலர்த்தவும்.
- அதனை மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- சுத்தமான பாட்டிலில் கொஞ்சம் ரோஜா இதழ்கள் + கொஞ்சம் சர்க்கரை என மாற்றி மாற்றி போட்டு மூடி வைக்கவும்.
- மறுநாள் பாட்டிலை வெயிலில் வைக்கவும், மாலையில் நன்கு கிளறி விடவும்.
- இதே போல் 1 வாரம் வரை வைத்து எடுத்தால் குல்கந்து ரெடி!
இதைப் பதிவேற்றியவர்..
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →
தேன் இட வேண்டாமா?
தேவையில்லை, அதற்குப் பதிலாகத்தான் நாட்டு சர்க்கரை சேர்க்கிறோம்!