×
Saturday 22nd of August 2026

பகவத் கீதை (சிறுவர்களுக்கு)


bhagavad-gita-for-kids-in-tamil

Bhagavad Gita for Kids in Tamil

எழுதியவர் – திருமதி வசந்தா தேவராஜன்

பகவத்கீதை போர்க்களத்தில் அர்ஜுனன் போர் புரிவது தர்மமா அதர்மமா என்ற குழப்பத்தில் இருந்ததால் கண்ணன் இப்படி உலகத்தோருக்கு பலவித குழப்பங்கள் வருவது இயற்கை. ஆதலால் நம் எல்லோருடைய அன்றாட வாழ்விற்கும் பொருந்துவது போல் சில உரையாடல்களை உபதேசமாக அருளினான்.

நம் குழந்தைகள் பள்ளிகளில் கல்லூரியில் பல தோல்விகளை சந்திக்க நேருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. பகவத் கீதை அவர்களுக்கு நல்வழி காட்டும் ஓர் உயர் போதனையாக விளங்கும். போதனை என்ற வார்த்தை இக்கால சிறுவர்களுக்கு பிடிக்காத வார்த்தை.

அதனால் நாமும் கண்ணனைப்போல் அவர்களுடன் இனிமையாக உரையாடுவோம். ஒவ்வொரு பெற்றவரும் அவர்களுடன் சில மணிகளாவது அமர்ந்து உரையாட வேண்டும்.

கண்ணன் நினைத்திருந்தால் அர்ஜுனனை அதிகாரத்துடன் பேசாமல் போர் புரி என்று சொல்லியிருக்கலாம். அப்படி செய்யாது பெரியோர்கள் மற்றவர்களின் ப்ரச்னையை எப்படி தீர்க்க வேண்டுமென தானே நடத்திய நாடகம்தான் கீதை உரையாடல்கள். குழந்தைகளும் தனக்கே எல்லாம் தெரியும் என பெரியோர்களிடம் கேட்பது கவுரவக்குறைவாக நினைக்கக் கூடாது.

அர்ஜுனன் தன் குழப்பத்தை தெளிவாக நண்பனிடம் சொல்லியதால் தீர்வும் சரியாக கிடைத்தது. துரியோதனனைப்போல் அஹங்காரமாக யார் பேச்சையும் கேட்காமல் இருந்தால் பேரிழப்பை சந்திக்க நேரும்.

கார்ப்பண்ய தோஷோ பஹதஸ் வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம்மூட சேதா: (2/7)

எது தவறு எது சரி என குழப்பத்தில் தடுமாறும் தன்னை மாணவனாக ஏற்று பாதை தெளிவாக காட்ட கண்ணனை வேண்டுகிறான்.

குழந்தைகள் தனக்கு பாடங்களில் பயிற்சிகளில் தேர்வுகளில் குழப்பம் வரும்பொழுது சரியான நபரிடம் (சிறுவர்களுக்கு பெற்றோர் பெரியோர்) கூறி தெளிந்த முடிவு எடுக்க வேண்டும்.

படிப்பில் கவனம் செலுத்தி படியுங்கள். முயற்சிகள் முனைப்போடு செய்வது முக்கியம். சில சமயம் நல்ல மார்க்குகள் கிடைக்காமல் போகலாம், மனம் தளற வேண்டாம். வெற்றி தோல்வி வாழ்க்கையில் வருவதுதான். குழந்தைகள் ஒப்பீடுகள், சமூக அங்கீகாரம் போட்டிகள் இவற்றின் மத்தியில் வாழ்கிறீர்கள். உடனடி வெகுமதியைவிட கைதட்டலை விட முடிவால் நொறுங்கிப்போகாமல் மீண்டு எழும் ஆற்றலைபெற பெற்றோரும் ஆசிரியர்களும் உதவ வேண்டும்.

கர்மண்யேவாதி காரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்ம பலஹேதுர்பூ: மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி (2/47)

உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தடுமாறாது இருக்கவேண்டும்

குழந்தைகள் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களுக்கு வழிகாட்டுவது பெற்றோரின் கடமை. மனக்கட்டுப்பாடு மிக முக்கியம். மனமே ஒருவனுக்கு நண்பன் அதே மனம் அவனுக்கெ எதிரியும் கூட. படிக்கும் நேரத்தில் மனம் கேளிக்கைகளில் ஈடுபடாது மனதை பழக்கினால் ஒரு நல்ல நண்பனாக நம் மனதே நம்மை வழிநடத்தும்.

பந்துராத்மனஸ்தஸ்ய யேனாத்மைவாத்மனா ஜித:
அநாத் மனஸ்து சத்ருத்வே வர்த்தேதாத்மைவ சத்ருவத் (6/6)

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்

குழந்தைகள் எளிதில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் குணம் கொண்டவர்கள். தான் நினைத்ததை சாதிக்கமுடியாது தடங்கல் வர கோபத்தில் சில தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

க்ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸ்ம்மோஹத் ஸ்ம்ருதி விப்ரம:
ஸ்ம்ருதிப் பரம்ஷாத் புத்திநாஷோ புத்திநாஷாத் ப்ரணஷ்யதி (2/63)

கோபத்தில் அறிவு தடுமாற்றம் அடைந்து விவேகத்துடன் செயல் பட முடியாது. அப்பொழுது நாம் அடையவேண்டிய இலக்கை அடைவது கடினம்.

இதனை பெற்றோர்கள் ஆசிரியர்கள் நிதானமாக எடுத்துரைத்து இலக்கையடைய அவர்கள் உதவ வேண்டும்.

எல்லோரையும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

கருணையை கற்றுக்கொள்ளும் குழந்தைகள் எளிதில் நேசிக்கக்கூடியவர்களாக ஆகிறார்கள். விமர்சனங்களை கையாளும் திறமையும் வளரும், மனக் காயங்களிலிருந்து விரைவாக மீண்டு விடுவார்கள்.

அனைவரிடமும் நட்பும் வெறுப்பற்ற தன்மையும் மன்னிக்கும் குணமும் வளர்த்துக்கொள்ள இன்ப துன்பங்களில் சமநிலை ஏற்படும். நல்லுறவுகள் உருவாகும். வெற்றி என்பது குழந்தையின் சாதனை மற்றுமின்றி யாராக மாறுகிறார்கள் என்பது மிக முக்கியம்.

வெறுப்பு வளற பழிதீர்க்கும் குணமும் வளரும். பெற்றோர்கள் வாழ்ந்து காட்டிட குழந்தைகள் வெகு சீக்கிரமாக இதனை உணர்ந்து மேம்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள்.

அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மூத்த: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:க ஸுக : க்ஷமீ (12/13)

சுயநலமின்றி பிறருக்கு செய்யும் சிறு உதவி

பள்ளிக்கூடத்தில் உடன் படிப்போருக்கு உதவுவது, தான் மட்டுமே சிறப்பாக மார்க்குகள் வாங்க நினையாது எல்லோரிடமும் ஞானத்தை பகிர்வது, ஏழை மாணாக்கருக்கு தன்னாலான உதவியை வழங்குவது, வகுப்பறையை சுத்தமாக வைப்பது, வீட்டிலும் பெரியோர்களை உடன் பிறந்தோர்களை மதித்து அவர்களுக்கு தேவையான சிறு உதவிகளை இயன்றவரை செய்து தருவது. உதவி செய்யும்பொழுது இவன் நமக்கு திருப்பி என்ன செய்வான் என்ற எதிர்பார்ப்பின்றி தூய மனதுடன் செய்யவேண்டும்.

உயர்குணங்களால் ஒருவன் வாழ ஏனையோரும் இவனைச்சான்றாக கொண்டு அதனை செய்ய மனித சமுதாயமே மலர்ச்சி பெறும்.

பகவத்கீதை என்பது பக்தி சாஸ்த்ரம் என்று பலரும் சிறு வயதில் குழந்தைகளுக்கு கற்றுத்தர முன்வருவதில்லை.

பக்தியுடன் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய எளிய முறைகளை கண்ணன் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

பெரியவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் எல்லோரும் குழந்தைகளை சிறு வயதிலேயே பண்புடன் கருணையுடன் கடமைகளை செய்யும் பாங்குடன் வளர்த்திட இளைய சமுதாயம் சீரிய முறையில் வளர்ந்து வீட்டையும் நாட்டையும் காத்து மேம்பட வளர்ந்து பெருமை சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: (18/66)

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து

எழுதியவர் – திருமதி வசந்தா தேவராஜன்

Also, read

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

sundara-kandam-hanuman
  • அக்டோபர் 10, 2025
சுந்தர காண்டம் – அனுமனின் அர்ப்பணிப்பு, வால்மீகியின் நன்றிக்கடன்
Proverbs in Tamil
  • மார்ச் 29, 2025
தமிழ்ப் பழமொழிகள் – Tamil Proverbs
Podhum Endra Maname Pon Seiyum Marunthu
  • மார்ச் 29, 2025
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து