×
Friday 10th of July 2026

சிகப்பு முளைக்கீரை கடையல்


சிகப்பு முளைகீரை கடையல் / Red Amaranth Leaves Kadaiyal

Table of Contents

Red Amaranth Leaves Kadayal in Tamil

முளைக்கீரையில் பச்சை, சிகப்பு என 2 வகை இருக்கிறது. அதில் சிகப்பு கீரை நன்கு சுவையாக இருக்கும். முளைக்கீரையில் பொரியல், கடையல் என செய்யலாம்.

முளைக்கீரையில் தக்காளி அல்லது புளி போட்டு கடையலாம். இதில் தக்காளி மட்டுமே சேர்த்து செய்துருக்கேன்.

தேவையான பொருட்கள்

முளைக்கீரை -1 கட்டு
பச்சை மிளகாய் -2
பூண்டுப்பல் -10
தக்காளி -1 பெரியது
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -2 டீஸ்பூன்
வடகம் -1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை

கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி நீரை வடிகட்டவும். முற்றிய தண்டாக இருந்தால் தனியாக சாம்பார் செய்யலாம். இளசாக இருந்தால் கீரையுடனே சேர்த்து கடையலாம்.

பாத்திரத்தில் கீரை + தக்காளி + பூண்டு + பச்சை மிளகாய் தேவைக்கு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

வெந்ததும் கீரை கடையும் சட்டியில் ஊற்றி, நீரை வடி கட்டி உப்பு சேர்த்து கடையவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து  தாளித்து, கீரையில் சேர்த்து மீண்டும் நன்கு கடைந்து, கீரை வேக வைத்த நீரை கலந்து பரிமாறவும்.


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

குல்கந்த்  /Homemade Gulkand Recipe | How To Make Gulkand
  • மார்ச் 29, 2025
குல்கந்து செய்வது எப்படி?
Sashiga Kitchen: ஓணம் ஸ்பெஷல் -3 /Kerala Onam Sadya -3
  • மார்ச் 28, 2025
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
கத்திரிக்காய் கடையல் /Brinjal Kadaiyal | Side Dish For Idli& Dosa
  • மார்ச் 28, 2025
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?