×
Saturday 26th of July 2025

ஸ்ரீரங்கம் 7 பிரகாரங்களின் சிறப்பு


Last updated on ஏப்ரல் 25, 2025

sri ranganathaswamy temple 7 prakarams specialities in tamil

Srirangam Temple 7 Prakarams Specialities

ஸ்ரீரங்கம் 7-ன் சிறப்பு

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2.

பெரிய கோவில்
பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
பெரிய கருடன்
பெரியவசரம்
பெரிய திருமதில்
பெரிய கோபுரம்

 – இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள்:

ஸ்ரீதேவி
பூதேவி
துலுக்க நாச்சியார்
சேரகுலவல்லி நாச்சியார்
கமலவல்லி நாச்சியார்
கோதை நாச்சியார்
ரெங்கநாச்சியார்

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்:

விருப்பன் திருநாள்
வசந்த உத்சவம்
விஜயதசமி
வேடுபறி
பூபதி திருநாள்
பாரிவேட்டை
ஆதி பிரம்மோத்சவம்

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்:

சித்திரை
வைகாசி
ஆடி
புரட்டாசி
தை
மாசி
பங்குனி

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்:

சித்திரை
வைகாசி
ஆவணி
ஐப்பசி
தை
மாசி
பங்குனி

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்:

கோடை உத்சவம்
வசந்த உத்சவம்
ஜேஷ்டாபிஷேகம் திருப்பாவாடை
நவராத்ரி
ஊஞ்சல் உத்சவம்
அத்யயநோத்சவம்
பங்குனி உத்திரம்

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்:

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்
நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்
திருப்பாணாழ்வார்
தொண்டரடிபொடி ஆழ்வார்
திருமழிசை ஆழ்வார்
பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன:

நாழிகேட்டான் கோபுரம்
ஆர்யபடால் கோபுரம்
கார்த்திகை கோபுரம்
ரெங்கா ரெங்கா கோபுரம்
தெற்கு கட்டை கோபுரம்-I
தெற்கு கட்டை கோபுரம்-II
ராஜகோபுரம்

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருளமாட்டார்:

வசந்த உத்சவம்
சங்கராந்தி
பாரிவேட்டை
அத்யயநோத்சவம்
பவித்ர உத்சவம்
உஞ்சல் உத்சவம்
கோடை உத்சவம்

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்:

பூச்சாண்டி சேவை
கற்பூர படியேற்ற சேவை
மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை
வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்
உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
தாயார் திருவடி சேவை
ஜாலி சாலி அலங்காரம்

 – கொடுக்கப்பட்டுள்ள 16ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

 பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்!
காரியங்கள் அணைத்தும் கைகூடும் பாரீர்! 

Also, read

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் வரலாறு – Srirangam Temple History in Tamil


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்