Tag: Thirukoodal Narpathu

  • திருக்கூடல் நாற்பது (கவிதைக் கதம்பம்) – கதம்பம் 4

    திருக்கூடல் நாற்பது (கவிதைக் கதம்பம்) – கதம்பம் 4

    Thirukoodal Narpathu கதம்பம் 4 நன்னிலம் புதைத்தச் சிறுவிதைப் போல என்றோ மனதில் பரமேட்டி புதைந்திருந்தான்! முன்னோர் மரபினால் அழகனை கண்டபின் இன்றோ என்னுளிருந்து எனை வளர்த்து ஆள்கிறான்! (34) பழகிய பரவசம் மனதுள்ளே மாயமாய் கூடல் அழகிய மாயனின் சன்னதி அடைந்தபின்! பழம் பிறப்பு எச்சமோ பான்மையின் மிச்சமோ பழம்படி என்னையுமுன் நினைப்பிலே நிறுத்துவாய்! (35) நீடு நெடு வையையின் இருந்தையூர் இறைவனே நீடு நெடு வாழ்விலே இருந்தெம்மைக் காத்திடாய்! ஈடுயிணை அற்றவன் வீற்றிருக்கும் விக்ரமன்!…

  • திருக்கூடல் நாற்பது (கவிதைக் கதம்பம்) – கதம்பம் 3

    திருக்கூடல் நாற்பது (கவிதைக் கதம்பம்) – கதம்பம் 3

    Thirukoodal Narpathu கதம்பம் 3 பொய் நீக்கி மெய்க் காட்டி பொற்கிழியறுத்தப் பட்டனை தெய்வம் நாராயணன் என்றுணர்த்திய விட்டுச்சித்தனை ப‌ட்டத்தானைமிசை யேற்றினான் வல்லபன் -கருடப்புள்ளேறி விட்டத்தில் தோன்றியது திருக்கூடல் அழகனே! (23) வாணகன் வானிலே விட்டுசித்தன் காணவே! மாண்கெழுக் காட்சியை மக்களும் காணவே! கண்ணூறு கழிக்கவே காலமெல்லாம் நிலைத்திடும் வைணவ வைரமாய் திருப்பல்லாண்டு பிறந்ததே! (24) கோரிய வரத்தினை தடையில்லா வழங்கிடும் காரிருள் கூடற் கோவிந்தன் அழகினை கூரிய வேல் கொண்ட கலியன் கூறிய சீரிய பாசுரம்…

  • திருக்கூடல் நாற்பது (கவிதைக் கதம்பம்) – கதம்பம் 2

    திருக்கூடல் நாற்பது (கவிதைக் கதம்பம்) – கதம்பம் 2

    Thirukoodal Narpathu கதம்பம் 2 தூயவன் சாயவன் தூதுழாய் மாயவன் வேயவன் வேயவள் போற்றிய வாமனன்! ஆயவள் ஆயவன் ஆநிரை நேயவன் மேயமில் மேணியன் பாற்கடற் பாயலன்! (12) புவியளந்த பெருமாளின் படி தாண்டா பத்தினியாம் பவித்தரை இவளென்று பாரெங்கும் கொண்டாட‌ மதுரவல்லி மணாளன் எந்தை என்றானபின் மதுரமாநகருளே ஆதித் தாய் எனக்குந்தாயானாலே! (13) தூமலர்த் தாமரைக் கரத்தினைக் கொண்டவள் மாமலை தாங்கிய அழகனை வென்றவள்! புரட்டாசி பாற்குடமுன் பாதத்தில் சேர்வித்தால் துருசுடை பேய்மனம் தூமனம் ஆகாதோ!…

  • திருக்கூடல் நாற்பது (கவிதைக் கதம்பம்) – கதம்பம் 1

    திருக்கூடல் நாற்பது (கவிதைக் கதம்பம்) – கதம்பம் 1

    Thirukoodal Narpathu கதம்பம் 1 பரமபத நாதனாய் தேவிமார் இருவருடன் திருக்கூடல் தலம் கொண்டாய் நான்யுகமுன்னே! இருகரம் இணைத்துச் சிரம் பணிந்தேன் கூடலழகா! வரமொன்று வேண்டும் உன் புகழ் பரப்பிட!   (1) துயின்மடிந்தான் திருக்கரணத் தளிமம் மீதே! அயன் படைத்தான் உந்தியில், உலகுப் படைக்க! அவ்வுலகிலே என்னையும் ஓருயிராய் படைத்தான் அவ்விடம் அழகனின் அருள் சூழ்ந்தத் திருக்கூடலே!   (2) நாடினர் அழகனை பிரளயத்தின் தாக்கத்தால் கூடிய மேகங்கள் நான்மாடம் போல் அமைந்திட‌ ஆடலும் பாடலும்…