வெந்தய களி செய்வது எப்படி?
மார்ச் 28, 2025
in
சமையல்
0
3553
Last updated on மே 21, 2025
Vendhaya Kali Recipe in Tamil
வெந்தய களி – இதனை காலை உணவாக பூப்பெய்தும் பெண்களுக்கு கொடுப்பார்கள். வெயில் காலங்களில் உடம்பு குளிர்ச்சியடையவும் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
வெந்தயம் – 100 கிராம்
புழுங்கலரிசி – 400 கிராம்
வெள்ளை முழு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
பனைவெல்லம் – 200 கிராம்
நல்லெண்ணெய் – 100 மிலி
ஏலக்காய்தூள் – 1/2 டீஸ்பூன்
சுக்குபொடி – 1/4 டீஸ்பூன்
செய்முறை
அரிசி + உளுந்து இவற்றை ஒன்றாகவும், வெந்தயத்தை தனியாகவும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
மறுநாள் வெந்தயத்தை தனியாக வெண்ணெய் மாதிரியும், அரிசி உளுந்தினை மைய அரைக்கவும்.
பனைவெல்லதில் நீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் கொதிக்க வைத்து ஏலக்காய்தூள் + சுக்கு பொடி சேர்த்து இறக்கவும்.
அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலக்கி பின் தேவையான நீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைக்கவும்.
கைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும், ஒட்டும் போது நெல்லெண்ணெய் ஊற்றி மீண்டும் கலக்கவும்.
இப்போழுது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போதோ அல்லது ஈரக்கையால் தொட்டால் மாவு ஒட்டாமல் வந்தாலோ அடுப்பிலிருந்து இறக்கவும்.
மாவு கையில் ஒட்டினால் மீண்டும் கிளறவும்.
கிண்ணத்தில் களியை வைத்து அதன்மேல் பனைவெல்லத்தினை ஊற்றி பரிமாறவும்.
இதைப் பதிவேற்றியவர்..
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →