- மார்ச் 29, 2025
Last updated on மே 28, 2025
கா-62எ (K-62A) என்ற அடையாள எண் உடைய முத்திரை ஒன்று சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் ஒன்றான காளிபங்கன்-இல் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய அரசு, புதுடெல்லி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
இந்த முத்திரையின் நிழல் படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி. ஐ. எஸ், ஐ தொகுப்பு 1, பக்கம் 310 – லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 374 – லும் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த முத்திரையை பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், காரைக்குடி, முனைவர் காசி ஸ்ரீ காளைராசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியாவது,
நீள் செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 7 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது எழுத்து 3-ஆவது எழுத்துடனும், 4-ஆவது எழுத்து 5-ஆவது எழுத்துடனும், 6-ஆவது எழுத்து 7-ஆவது எழுத்துடனும் இணைந்துள்ளன.
இந்த முத்திரை வலமிருந்து இடமாக, ப + (ஞ் + சா) + ( ட் + ச ) + (ரு + ள்). பஞ்சாட்சருள் என்பது பஞ்சாட்ச(ர) (அ)ருள் எனப் படிக்கப்படுகிறது.
இதிலுள்ள எழுத்துக்களில், ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ஞ்’ என்பது 4-ஆவது மெய் எழுத்து, ‘சா’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ட்’ என்பது 5-ஆவது மெய் எழுத்து, ‘ச’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ள்’ என்பது 16-ஆவது மெய் எழுத்து ஆகியவை ஆகும்.
பஞ்சாட்ச(ர) (அ)ருள்
பஞ்சாட்ச(ர) என்னும் பஞ்சாட்சரம் என்பதற்கு நமசிவாய என்னும் ஐந்தெழுத்துகளான சிவபி
பொருள்: நமசிவாய என உச்சரிப்பதன் பலன் நல்வினை
இந்த முத்திரையின் வாயிலாக சிந்து சமவெளி நாகரிக மக்கள் ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து அருள்மிகு சிவபிரானை வணங்கி வழிபட்டுள்ளனர் என்பதும், அவ்வாறு உச்சரிப்பதன் பலன் நல்வினை என்னும் முற்பிறப்பில் செய்த புண்ணியச் செயல் என்பதையும் நன்கு அறிந்துணர்ந்து உள்ளனர் என்பதும் தெரியவருவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Also, read: நமசிவாய என உச்சரிப்பதன் நல்வினை பிறவிநீக்கமே
Thanks: