×
Sunday 27th of July 2025

மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்


Last updated on ஜூன் 9, 2025

mantra rajapada stotram lyrics in tamil

Mantra Rajapada Stotram

ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்

ஒரு மனிதனின் ஜாதகத்தில் 6 ஆம் இடம் என்பது நோய், கடன், எதிராளி, வழக்கு போன்றவற்றை பற்றி கூறும் ஒரு வீடாகும். இந்த 6 ஆம் இடத்தில் பாதகமான கிரகங்கள் ஏதேனும் இருந்தால் மேற்கூறிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறுவர். ஆனால் பலருக்கும் ஜாதகத்தில் இந்த இடம் நல்ல நிலையில் இருந்தாலும் மேற்கூறியவற்றில் எல்லா பிரச்சனைகளும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் துதிக்க வேண்டிய “ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்” இது

மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஈஸ்வர உவாச:

வ்ருத்தோத் புல்ல விசா’லாக்ஷம் விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச்’வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்.

பொருள்: அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கும் திருமுக மண்டலமும், திருநேத்ரமும் படைத்தவன் எம்பெருமான். அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவன். தமது சிம்ம கர்ஜனையால் அண்டங்கள் அனைத்தையும் அதிரச் செய்தவன். அப்படிப்பட்ட எங்கும் பரவி நின்ற உக்ர ரூபியான எம்பெருமானை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (1 )

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸுதம்
நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்.

பொருள்: திதியின் மகனும், கொடிய அரக்கனுமான் இரணியன், உலகத்தில் எவராலும் தன்னைக் கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே. உம்மை நான் வணங்குகிறேன்.

பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம் புஜ ப்ரவிஷ்டாஷ்ட திச’ம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்.

பொருள்: விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையிலுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையிலுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ள விஸ்வரூபம் கொண்ட, அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்.

பொருள்: சூரியன, சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட (தேஜஸ்) ஒளிமிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகறேன்.

ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜா’நாதி நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம்.

பொருள்: சக இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோ முகம்’ என போற்றப்படும் சக்தியையுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மந:
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்.

பொருள்: பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்.

யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா:
ரோகாத்யாஸ்ச ப்ரணச்’யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்.

பொருள்: உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல் ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோய்களையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

ஸர்வோபியம் ஸமார்ச்’ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே
ச்ரியா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்.

பொருள்: அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற ‘ஶ்ரீ லக்ஷ்மி தாயாரால்’ விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் ச’த்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாச’யேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.

பொருள்: மரணகாலத்தில் எம தூதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்கள் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலியவந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம்
த்யக்தது: கோகிலாந் காமாந் அச்’நந்தம் தம் நமாம்யஹம்.

பொருள்: எந்த கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்.

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந:
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்.

பொருள்: இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து சரணடைகிறேன்.

ச’ங்கரேண ஆதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ
நிர்ணயம் த்ரிஸந்த்யம் ய:படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே.

பொருள்: இந்த மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜத்தின் பதங்களின் தத்வ நிர்ணயம் சங்கரனான என்னால் மிகவும் உகந்து வெளியிடப்பட்டது. இந்த ஸ்ரீ மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் மதியத்தில், மாலையில் யார் உகந்து உரைக்க வல்லார்களோ அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதி கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன். (11)

***இதி ஶ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ***

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.

பொருள்: கோபம், வீரம், தேஜஸ் (பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளும் தரவல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

ஶ்ரீமதே லக்ஷ்மி நரசிம்ம ப்ரஹ்மணே நம:
ஓம் ஶ்ரீம் ஶ்ரீயை நம:
ஓம் பூம் பூம்யை நம:
ஓம் நீம் நீளாயை நம:

பொருள்: ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் என்ற மகாதெய்வத்திற்கு நமஸ்காரம்.
லக்ஷ்மி தாயாருக்கு நமஸ்காரம்.
பூமாதேவிக்கு நமஸ்காரம்.
நீளாதேவிக்கு நமஸ்காரம்.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை போற்றி ஈஸ்வரர் பாடியதாக கருதப்படுகிறது இந்த ராஜ பத ஸ்தோத்திரம். இது மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் விளக்கேற்றி கிழக்கு திசையை நோக்கி பார்த்தவாறு 3 முறை படிக்க வேண்டும். இரவு உறங்கும் முன்பும் முகத்தை கழுவிக் கொண்டு, மூன்று முறை படிக்க கடன் பிரச்சனைகள் தீரும். நீண்ட நாள் நோய்கள் தீரும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி உண்டாகும்.

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


2 thoughts on "மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
shani chalisa lyrics in english with meaning
  • ஜூலை 2, 2025
சனி சாலிசா: சனி பகவானின் அருளைப் பெறவும்
kali-kavacham
  • ஜூன் 23, 2025
ஸ்ரீ காளியம்மன் கவசம்